பக்கம்:முந்நீர் விழா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விச்சுளிப் பாய்ச்சல்

57



உமக்கு நன்மை தரும் பொருள் இன்னது என்று யோசித்து அந்தப் பொருளைக் கேளுங்கள்.

இரவலாளர்-யாசகர். திரு.செல்வம். முதிரை-துவரை. மருப்பு-கொம்பு. உறுதி ஆராய்ந்து அவ்வுறுதியுடையதைக் கேண்மின் என்று கூட்டிப் பொருள் செய்யவேண்டும்.)

இந்தப் பாடல் புலவர்கள் வாயிலாகச் சென்று அயன்றைச் சடையனார் காதில் விழுந்தது. அதைக் கேட்டுப் பாண்டியனுடைய ஆர்வத்தை அவர் உணர்ந்து கொண்டார். பின்பு ஒரு முறை அவர் பாண்டியனை வந்து கண்டு அளவளாவி இன்புற்றார். விச்சுளிப் பாய்ச்சலில் வல்ல கழைக் கூத்தியின் கூத்தும் கவியும் அரசனையும் கொடையாளரையும் நண்பர்கள் ஆக்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/66&oldid=1207552" இலிருந்து மீள்விக்கப்பட்டது