பக்கம்:முந்நீர் விழா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞனும் செழியனும்

59

 னம் செய்தவர்களும் இப்படிச் சொல்ல முடியாதே! இவருடைய நினைவாற்றல் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது!’ என்று கொண்டாடினார்கள்.

கல்வி கேள்விகளிலே சிறந்து விளங்கியதோடு கவி பாடும் ஆற்றலும் இவருக்கு உண்டாயிற்று. கருத்தை அழகாகவும் தெளிவாகவும் சொல்லும் கவிகளைப் பாடினர். திருக்கழுக்குன்றப் புராணம், திருவாரூர் உலா, சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் முதலிய நூல்களை இயற்றினார்.

அக்காலத்தில் இலங்கையின் வட பகுதியைப் பரராச சிங்கம் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான். யாழ்ப்பாணத்தில் தமிழறிவில் சிறந்த மக்கள் இருக்கிறார்கள் என்பதைக் கேள்வியுற்று, இவர் கடல் கடந்து இலங்கை சென்றார். பரராச சிங்கத்துக்கு முன் கம்பராமாயண அவதானம் செய்து காட்டி அவ்வரசனையும், அங்கிருந்த புலவர் பெருமக்களையும், பிறரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

அரசன் இவருடைய இணையற்ற புலமைத் திறத்தைப் பாராட்டிப் பல பரிசுகளை ஈந்தான். ஒரு யானைக் குட்டியையும் சில ஊர்ப் பகுதிகளையும் வழங்கினான். 'யானைக் கன்றும் வளநாடும் புலவர் பெற்றார்’ என்று சொல்லுவார்கள்.

*

க் காலத்தில் சின்னச் சேலத்தில் செழியதரையன் என்ற ஒருவன் இருந்தான். மழையில்லாமல் அங்கே தண்ணீர்ப் பஞ்சம் உண்டாயிற்று. விளைவு குறைந்தால் பிற இடங்களிலிருந்து நெல்லும் அரிசியும் வருவித்து உண்ணலாம். குளிக்காமல் இருந்து சில நாட்கள் பொழுது போக்கலாம். ஆனால், தண்ணீர் குடியாமல் ஒரு வேளையாவது இருக்க முடியுமா? ஊரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/68&oldid=1207557" இலிருந்து மீள்விக்கப்பட்டது