பக்கம்:முந்நீர் விழா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞனும் செழியனும்

61

 காவிரியாற்றிலிருந்து பெரிய பெரிய ஆலைக் கொப்பரைகளை வண்டியில் வைத்து, அதில் நீரைச் சேமித்துக் கொண்டு வரச்செய்தான். இத்தகைய வேலைகளுக்குக் கணக்கு இல்லாத பொருள் செலவாயிற்று. ஆனாலும் பல மக்கள் சாவாமலும் ஊரைவிட்டுக் குடி போகாமலும். இருக்கும்படி செய்தன, அவ்வள்ளலின் செயல்கள். தாகமுடைய மக்கள் காவிரி நீரால் தாகம் தீர்ந்தனர்.

கிணறுகள் வெட்ட வெட்டப்பாறையும் மண்ணும் வந்தனவேயன்றி, நீரைக் காணவில்லை. எவ்வளவு உழைப்பு வேண்டியிருந்தாலும் எத்தனை நாளானலும் கீழ் நீரைக் கண்ட பிறகுதான் மறு காரியம் பார்ப்பதென்ற துணிவு அவனுக்கு. வேலே நடக்கும் இடத்தில் உலாவினுன் செழியதரையன்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழி பொய்யாகுமா? கடைசியில் தண்ணிர் தலை காட்டியது. சில இடங்களில் வேகமான ஊற்றே கிட்டியது. கிணற்றில் தண்ணிரைக் கண்ட மக்களின் கண்கள் உவகையால் நீரைச் சொரிந்தன. மக்கள் தாகம் தீர்ந்தனர். அது முதல் செழியதரையனுக்குத் தாகம் தீர்த்த செழியதரையன் என்ற பெயர் வழங்க லாயிற்று.

தாகம் தீர்த்த செழியனுடைய புகழ் பிற மண்டலங்களையும் எட்டியது. வள்ளல்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடும் புலவர்கள் அவனை அடைந்து பாடினர். அந்தகக் கவியாகிய வீரராகவ முதலியாரும் அவனை நாடிச்சென்றார். அவனைக் கண்டு அளவளாவிப் பல. பாடல்களைப் பாடினர். பல பரிசில்களைப் பெற்றார். அவனிடம் விடை பெற்றுக் கொண்டபோது புலவர் பிரி" வாற்றாமல் வருந்தினர். அப்போது அவ்வள்ளல், "உங்கள் தமிழை நான் ஒருவனே நுகர்வதென்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/70&oldid=1207559" இலிருந்து மீள்விக்கப்பட்டது