பக்கம்:முந்நீர் விழா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

முந்நீர் விழா

என்றும், வேலை விலக்கி, 'படையாய்த் தொடாத குந்தம் என்றும், பாதிரிப்பூவை விலக்கி, 'சூடாத பாடலம்' என்றும், மாமரத்தை விலக்கி, ‘பூவாத மா' என்றும், சடையை விலக்கி, 'தொடுத்துமுடியாத சடிலம்' என்றும், கிளியை விலக்கி, 'சொன்ன சொற் சொல்லாத கிள்ளை என்றும் கூறினார். இப்படிப் பத்துச் சொற்களால் குதிரையைக் குறித்து, 'அதனை எனக்கு அனுப்ப வேண்டும்' என்று பாடினார்.

பாடாத கந்தருவம், எறியாத கந்துகம்,
பத்திகோ ணுத கோணம்,
பறவாத கொக்கு, அனற் பண்ணாத கோடை,வெம்
படையாய்த் தொடாத குந்தம்,
சூடாத பாடலம்,பூவாத மாவொடு,
தொடுத்துமுடி யாத சடிலம்,
சொன்னசொல் சொல்லாத கிள்ளைஒன் றெங்கும்
துதிக்கவர விடவேண்டுமே.

சீட்டுக்கவி தாகம் தீர்த்த செழியனுக்குப் போயிற்று. அவன் உடனே குதிரை ஒன்றை அனுப்பினான். அந்தக் குதிரையின் மீது ஏறிக் கவிஞர் வீரராகவர் சேலத்துக்கே வந்தார். அவரைக் கண்டவுடன், "நீங்கள் எங்கோ போகவேண்டுமென்றல்லவா குதிரை கேட்டனுப்பினீரீர்கள்? இங்கே வரத்தானா? என் பாக்கியமே பாக்கியம்! " என்றான் செழியன் மகிழ்ச்சியுடன்.

“எத்தனை தரம் இங்கே வந்தாலும் எனக்குச் சலிப்பு இல்லை. உங்களுக்குத்தான் தொல்லை." .

"தொல்லையா? தமிழ் அமுதம் தெவிட்டுமா? எத்தனை முறை வந்தாலும் எனக்கு இன்பந்தான்.' "

"யார் கொடுக்கிருர்களோ, அவர்களிடந்தான் அடிக்கடி புலவர்கள் போவார்கள். காய்த்துப் பழுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/73&oldid=1207575" இலிருந்து மீள்விக்கப்பட்டது