பக்கம்:முந்நீர் விழா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞனும் செழியனும்

65

 மரத்தில்தான் திரும்பத் திரும்பக் கல்லை எறிவார்கள். எங்கே தண்ணிர் கிடைக்கிறதோ அந்த இடத்தில் தான் தோண்டுவார்கள். பசுமாடு கறக்குமானல் எப்படியாவது அதன் பாலைப் பெறுவதற்காக அதன் காலையும் கட்டிப் போடுவார்கள். பெரிய உப்புக்கடலே யார் மதிக்கிறார்கள்? பாற்கடலைத்தான் மத்திட்டுக் குழப்புவார்கள். பழம் தருவதென்று மரத்தைக் கல்லால் எறியக் கூடாதென்று யார் சும்மா இருக்கிறார்கள்? அவ்வண்ணமே கொடுக்கும் உபகாரியை வருத்தியாவது மீட்டும் வேண்டியதைக் கொள்ளத் துணிவது உலகத்து இயல்பு. புலவர்களுக்கோ அதைத் தவிர வேறு வழி இல்லை” என்று அந்தக் கவிஞர் சொல்லி மகிழ்வித்தார். அதனோடு நில்லாமல் அந்தக் கருத்தை ஒரு பாடலாகவே பாடிவிட்டார்.

சாலப் பழுத்த மரம்பார்த்து
எறிவர்;தண் ணிர்சுரக்கும்
ஞாலத்து அகழ்வர்; கறக்கின்ற
ஆவைநற் கால்தளைவர்;
நீலக் கடல்விட்டுப் பாலாழி
மத்திட்டு நிற்பர் என்னீர்,
சேலத்து வேந்தன் அகத்தாகம்
தீர்த்த செழியனுக்கே.

(ஞாலத்து - நிலத்தில். தளைவர் - கட்டுவர். லேக் கடல் - உப்புக் கடல். என்னீர் - என்று சொல்லுங்கள்.)

வேறு ஒருவரைப் பார்த்து, "நான் அடிக்கடி வருகிறேன் என்று நினைக்க வேண்டாம். எங்களுக்குப் போக்கிடம் எங்கே?” என்ற கருத்தோடு சொல்லுவதாக அமைந்தது பாட்டு.

புலவர், செழியனுடைய தமிழ்த் தாகத்தைத் தீர்த்தார். அவன் பல பரிசில்களை வழங்கினான்.

- முத்-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/74&oldid=1207578" இலிருந்து மீள்விக்கப்பட்டது