பக்கம்:முந்நீர் விழா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அற்புதக் கொடை

தொண்டை மண்டலத்தில் ஓர் ஊரில் வல்லாளர் என்ற செல்வர் வாழ்ந்திருந்தார். அவர் வாழ்ந்திருந்த ஊர் இன்னதென்று தெரியவில்லை.

அவர் செல்வத்தைப் பயன்படுத்தும் வகை தெரிந்தவர். வறியவர்களுக்கு அளிக்கும் வண்மை உடையவர்.

ஒரு வகையில் புலவர்களும் வறியவர்களாகவே வாழ்க்கையை நடத்தினர். வறியவர்களுக்குப் பொருள் கிடைப்பதில்லை. புலவர்களுக்கோ கிடைத்தும் கையில் நிற்பதில்லை. இதுதான் வேறுபாடு.

அவ்வப்போது கிடைக்கும் பொருளை உற்றாருக்கும் உறவினருக்கும் வாரி வீசி விடுவார்கள் புலவர்கள். ஒரு வகையில் அவர்கள் துறவிகளாகவும், மற்றொரு வகையில் வள்ளல்களாகவும் இருந்தனர். நாளைக்கு வேண்டுமே!’ என்ற கவலை இல்லாமல் கையில் உள்ளதை வீச வேண்டுமானல் துறவிகளைப் போன்ற மனப்பான்மை அவர்களிடம் இருக்க வேண்டும். அப்படியே வறியவர்களைக் கண்டால், உள்ளதை இரங்கி ஈயும் பான்மை வள்ளல்களுக்குரியது மாத்திரம் அன்று புலவர்களிடமும் அந்தப் பொற்பு இருந்தது. அதனால்தான், புலவர்கள் எப்போதும் வறியவர்களாக, நித்திய தரித்திரர்களாக வாழ்ந்தனர் போலும்.

தொண்டை நாட்டு வள்ளலாகிய வல்லாளர் தம்முடைய ஆற்றலுக்கு ஏற்ற வகையில் வறியவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/75&oldid=1207583" இலிருந்து மீள்விக்கப்பட்டது