பக்கம்:முந்நீர் விழா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

முந்நீர் விழா

அதிகம். வீட்டிற்குப் போவதற்குள் மனம் மாறினால் என் செய்வது என்று எண்ணுவார் போலும்! எத்தனையோ சமயங்களில் நடுவழியில் கண்ட புலவனுக்குக் காதுக் கடுக்கனைக் கழற்றிக் கொடுத்திருக்கிறார்; இடுப்பு அரைஞாணை எடுத்து வழங்கியிருக்கிறார்.”

"அப்படியானல் அந்த வள்ளலை அவசியம் பார்த்து அளவளாவ வேண்டும். நீங்கள் என்னை அவரிடம் அழைத்துச் செல்வீர்களா?"

"அதற்கு அவசியமே இல்லை. உங்களிடம் தமிழ் இருக்கிறது. அதுவே உங்களை அழைத்துச் செல்லுமே! நான் வந்து உங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில்லையே! அவருடைய இயல்பை உள்ளபடி உணரவேண்டுமானால், நீங்கள் தனியாகச் சென்று அவரைக் காண்பதுதான் நல்லது. நான் அவருக்குத் தெரிந்தவனாகையால், எனக்காக உங்களை வரவேற்றுப் பரிசளித்தார் என்று நீங்கள் ஒருகால் கருதவும் கூடும். அந்தக் கருத்துக்கு இடம் இல்லாமல் நீங்கள் தனியே சென்று பாருங்கள். வீட்டில் இருக்கும்போதுதான் பார்க்க வேண்டும் என்பதில்லை. எங்கேயாவது வழி மறித்துச் சோதனை போடுங்கள்.”

"நான் என்ன வழிப்பறிக்காரனா?”

"இல்லை, இல்லை; எங்கேனும் சென்று கொண்டிருக்கும்போது அவரைச் சந்தித்துப் பாருங்கள் என்று சொல்ல வந்தேன். அப்போது நான் கூறியவை எவ்வளவு உண்மை என்று தெரிய வரும்" என்றார் தொண்டை நாட்டுப் புலவர்.

அயல் நாட்டுப் புலவர் வல்லாளரைச் சென்று காண்பதென்று தீர்மானித்துக் கொண்டார். அவர் இருக்கும் ஊருக்குச் செல்லும் வழியைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/77&oldid=1207590" இலிருந்து மீள்விக்கப்பட்டது