பக்கம்:முந்நீர் விழா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திண்ணையில் கெண்டை

77



வருக்குப் பல உறவினர்கள் இருந்தார்கள். நண்பர்களோ அவர்களைவிட அதிகம். அவர்களையெல்லாம் அழைத்து உபசரித்து மகிழவேண்டும். அன்றியும் ஏழைகளுக்கு வயிறு நிரம்பச் சோறு போடவேண்டும். பரதேசிகளுக்கு ஆடையும் உணவும் வழங்கவேண்டும். இப்படியெல்லாம் விரிவாகத் திட்டம் வகுத்தார்.

ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொருவரை நியமித்து, குறையே இல்லாதபடி யாவும் உரிய காலத்தில் உரிய முறைப்படி நடத்த வேண்டும் என்று ஒழுங்கு செய்தார். உணவைக் கவனிக்க ஒருவர்; வரவேற்க ஒருவர்; அலங்காரத்துக்கு ஒருவர்; உக்கிராணத்திற்கு ஒருவர். இவர்களுக்குப் பலர் துணையாக நின்று உதவி செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் இப்படி முன்கூட்டியே ஒழுங்கு பண்ணுவிட்டால் பின்பு ஒரே குழப்பமாகி விடுமல்லவா?

கல்யாணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நெருங்கிய உறவினர்கள் வந்துவிட்டார்கள். பத்து நாட்களுக்கு முன்பு சற்றுத் துரர பந்துக்கள் வந்தார்கள். நாளுக்கு நாள் கூட்டம் மிகுதியாயிற்று. அங்கங்கே பந்தல்கள், வரவேற்பு மண்டபம், ஆடல் பாடல் கொட்டகை என்று பல அமைப்புக்கள் நிர்மானமாயின.

கல்யாணத்தன்று பார்த்தால், புங்கனுரே புதிய தோற்றம் அளித்தது; எங்கே பார்த்தாலும் தோரணங்கள், வாழைகள்; வீதி முழுவதும் கல்யாணத்துக்கு வந்த மக்கள்! இவ்வளவு பேருக்கும் சாப்பாடு போட்டு ஆக வேண்டுமே!

கல்யாணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்யாண விருந்து நடக்க வேண்டும். எல்லாருக்கும் ஒரே சமயத்தில் விருந்து அளிப்பதென்பது இயலாத காரியம். ஆதலால், பந்தி பந்தியாக விருந்து நடந்துகொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/86&oldid=1214788" இலிருந்து மீள்விக்கப்பட்டது