பக்கம்:முந்நீர் விழா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

முந்நீர் விழா



டிருந்தது-. யார் சாப்பிட்டார்கள், யார் சாப்பிடவில்லை என்று கண்டுபிடிக்க வகை இல்லை. அவரவர்கள் தாமே முயன்று சாப்பிட்டுவிட்டுப் போனால்தான்!

இந்தக் கூட்டத்தில் பல ஏழைகளுக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை; அங்கங்கே வீட்டுத் திண்ணைகளில் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சோர்வினால் சிலர் படுத்துவிட்டார்கள். .

அத்தகைய கூட்டத்தில் ஒரு புலவரும் இருந்தார். அவர் முதல் நாளே பட்டினி, அன்றாவது அந்தக் கல்யாணத்தில் வயிறு நிறைய உண்ணலாம் என்ற எண்ணத்தோடு வந்திருந்தார். வந்த இடத்திலும் எளிதில் உணவு கிடைக்குமென்று தோன்றவில்லை. என்னசெய்வார், பாவம் பசி மிகுதியால் அவர் கெண்டைக் காலில் குரக்கு வலி உண்டாயிற்று. அது தாங்காமல் அவர் வருந்தினார். அந்த நிலையிலும் அவர் கற்பனை வேலை செய்தது. அவர் கவிஞரல்லவா? சொல் அலங்காரம் தோன்ற ஒரு கவியைப் பாடத் தொடங்கினார். பசியினால் பலர் துன்புறுவதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது அவர் கருத்து ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்லாமல், மறைத்து வைத்து அலங்காரமாகச் சொன்னார்.

அந்தப் பாட்டில், முதலில் புங்கனூர் கிழாரைத் திருமாலுக்கு ஒப்பாகச் சொன்னார். அரசர்களையும் மிக்க செல்வம் உடையவர்களையும் நெடுமாலாகச் சொல்வது மரபு. இரு வகையினரும் திருவை உடையவர்கள் அல்லவா? இங்கே அவர் புங்கனூர் கிழாரைக் கண்ணபிரானகப் பாடினார்.

கண்ணன் வெண்ணெயைத் திருடினான். அதைக் கண்டு கோபித்து, அவன் அன்னை மத்தால் அடித்தாள். அதனால் மேலே புண் உண்டாயிற்று. திருட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/87&oldid=1214786" இலிருந்து மீள்விக்கப்பட்டது