பக்கம்:முந்நீர் விழா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திண்ணையில் கெண்டை

79



கண்ணன் கையில் வெண்ணெய் இருக்கிறது. அதைப் பார்க்கிறான். உடனே அன்னையின் சிவந்த கண்களை ஒரக் கண்ணாலே பார்க்கிறான். பிறகு, தன் மேனியில் மத்தடியினால் உண்டான காயத்தைப் பார்க்கிறான். வெண்ணெய் திருடிய கண்ணணாகிய திருமாலே புங்கனுர் கிழார் என்று பாடினர், புலவர்.

வெண்ணெயும் பார்த்தன்னை
கண்ணையும் பார்த்துத்தன் மெய்யிற்பட்ட
புண்ணேயும் பார்த்த திருநெடு
மால்புங்க னூர்கிழவன்

என்று பாடினர். இதற்கு மேல் தாம் சொல்லத் துணிந்த பொருளை வைத்தார். அந்தப் பகுதி அந்தச் செல்வருடைய நீர்வளத்தையும் நில வளத்தையும் சொல்லி வியப்படைவதுபோல் அமைந்திருக்கிறது. "இவருடைய வயலில் சேல் மீன்கள் துள்ளும்; குளங்களில் கயல்கள் பாயும்; இவை ஆச்சரியம் அன்று: திண்ணையிலும் கெண்டை மீன்கள் புரளும் என்ற பொருள் தொனிக்கும்படி அமைந்தது அந்தப்பகுதி.

புங்க னுரர்கிழவன்
பண்ணையும் சேல்உக ளும்; தடம்
நீள்கயல் பாயும்; நெடுந்
திண்ணேயும் கெண்டை புரட்டும்கல்
யாணத்தில் சென்றவர்க்கே.

2

பாட்டை மேல் எழுந்த வாரியாகப் பார்த்தவர்களுக்கு ஏதோ ஒர் அற்புதத்தைக் கண்டு, 'அடடா!வயலிலும் குளத்திலும் மீன்கள் துள்ளுவதுபோல், வெறும் தரையாகிய திண்ணையிலும் கெண்டைமீன்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/88&oldid=1214784" இலிருந்து மீள்விக்கப்பட்டது