பக்கம்:முந்நீர் விழா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

முந்நீர் விழா

 புரளுகின்றனவே! என்று சொன்னதுபோல் இருக்கும். ஆனால் இதில்தான் புலவர் தம் கருத்தைப் புதைத் திருக்கிறார்.

இந்தப் பாட்டுச் சோழ மண்டல சதகம் என்ற நூலில் உதாரணமாக வரும் செய்யுள். இதன் உட்கருத்து விளங்காமல், கெண்டை-சோமனில் கரையில் உள்ள கெண்டை என்று ஒருவர் எழுதினார். நல்ல வேளை! ‘உணவிலே உள்ள கெண்டை என்று சைவத்துக்கு மாறுபாடாக எழுதாமற் போனாரே! -

விருந்துணவு கிடைக்காமல் பசியினால் துன்புறுகின்ற கூட்டத்தில் புலவரும் ஒருவராக இருந்தார். தம் நிலையை வீட்டுக் காரருக்குத் தெரிவிக்க வழி என்ன என்று பார்த்து இந்தப் பாட்டைப் பாடினார்.

குரக்கு வலி உண்டாவதைக் கெண்டை புரட்டுதல் என்று சொல்வார்கள். பலவீனம் உடம்பில் இருந்தால் காலில் கெண்டை புரட்டும். பசியினாலும் கெண்டை புரட்டும். -

ஒருவன் ஓர் ஊருக்குப் போனான். அங்கே அவனுக்கு இரண்டு உறவினர்கள் வேறு வேறு வீதிகளில் இருந்தார்கள். இரண்டு வீட்டுக்கும் சென்று பேசியிருந்து, மறுநாள் ஊருக்குப் போகப் போவதாகச் சொல்லிவிட்டு, தான் வந்த காரியத்தைப் பார்க்கச் சென்றான். அதை முடித்துக்கொண்டு இரவில் ஒரு வீட்டுக்குப் போனான். அங்குள்ள உறவினர். அவன் மற்றோர் உறவினர் வீட்டில் உண்டிருக்கக்கூடும் என்று எண்ணி, அவனை உண்ண அழைக்கவில்லை. அழைக்காத வீட்டில் சோறு போடென்று சொல்வது முறையல்லவே என்று எண்ணி, மற்றோர் உறவினர் வீட்டுக்குப் போளுன். அவரும், அவன் முன்போன வீட்டில் சாப்பிட்டிருப்பான் என்று எண்ணிணார். அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/89&oldid=1214783" இலிருந்து மீள்விக்கப்பட்டது