இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற நீதான் மக்கள்
எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செலுத்துகிறாய்.
நின் திருநாமம், பஞ்சாப்பையும் சிந்துவையும் குஜராத்தையும்
மஹாராஷ்டிரத்தையும் திராவிடத்தையும் ஒரிஸாவையும்
வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சியடையச்செய்கிறது.
அது விந்திய - ஹிமாலய மலைகளில் எதிரொலிக்கிறது;
யமுனை, கங்கை நதிகளின் இன்ப நாதத்தில் கலக்கிறது;
இந்தியக் கடல் அலைகளால் ஜபிக்கப்படுகிறது.
அவை நின் ஆசியை வேண்டுகின்றன;
நின் புகழைப் பாடுகின்றன.
இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற உனக்கு
வெற்றி! வெற்றி! வெற்றி!!