பக்கம்:முந்நீர் விழா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திண்ணையில் கெண்டை

81


போவதற்கு முன்பே எல்லாரும் உண்டு பாத்திரங்களை மூடிவைத்து விட்டார்கள்.

இப்படி இரண்டு வீட்டுக்கும் விருந்தாளியாகப் போகலாம் என்று எண்ணியவன், திட்டமாகச் சொல்லாமையால் இரவு பட்டினியிருந்தான். முன்பே மெலிவுள்ளவன் ஆகையால், இரவில் அவன் காலில் கெண்டை புரட்டியது. பசி தாங்காமல் இறந்துவிட்டானாம். இந்தக் கதையைக் குறிக்க ஒரு பழமொழி உண்டு. இரண்டு வீட்டு விருந்தாளி கெண்டை புரட்டிச் செத்துப் போனான் என்ற அப்பழமொழி இதைப் புலப்படுத்து கிறது. - பட்டினி கிடந்தால் கெண்டை புரட்டும் என்பதை இந்தப் பழமொழியால் தெரிந்து கொள்ளுகிரறோம். தாங்கள் உண்ணாமல் பட்டினி கிடப்பதால், தங்களுக்குக் கால்களில் குரக்கு வலி இழுக்கிறது என்பதைக் குறிப்பித்து, திண்ணையும் கெண்டை புரட்டும் கல்யாணத்தில் சென்றவர்க்கே என்று பாடினார் புலவர்.

புலவர், புங்கனூர் கிழவன் என்று சொல்லி ஏதோ பாடியதைக் கேட்டவுடன் அங்கிருந்தவர்களுக்கு அவர் மேல் கவனம் சென்றது. அவரைச் செல்வரிடம் அழைத்துச் சென்றார்கள். புலவர் அவரிடம் பாடலைச் சொன்னாரோ இல்லையோ, அவர் உடனே மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டார். அவருக்குப் பாட்டின் கருத்துத் தெளிவாகப் புலப்பட்டது. மானவுணர்ச்சி மீதுார்ந்தமையால் அவர் மூர்ச்சை போட்டு விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரைத் தெளியவைத்தார்கள். அவர் ஏவலின்படி, உடனே திண்ணையில் இருந்தவர்களுக்கெல்லாம் தனியே உணவு அளித்து உபசரித் தார்கள். புலவரும் விருந்துண்டதோடு நல்ல பரிசிலும் பெற்றார். .

முந்நீர்-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/90&oldid=1214781" இலிருந்து மீள்விக்கப்பட்டது