பக்கம்:முந்நீர் விழா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஒத்த மரபு

ந்திர நாட்டில் உள்ளது ஹம்பி என்னும் நகரம். விஜய நகர சாம்ராஜ்யத்தின் இராசதானியாக இருந்த ஊர் அது. அங்கே அரசனுடைய பிரதானியாக அறம் வளர்த்த முதலியார் என்னும் வேளாண் செல்வர் இருந்தார். அவர் தமிழ் நாட்டில் உள்ள செம்பூர் என்ற ஊரிலே பிறந்தவர். அவர் மதியிற்சிறந்தவராக இருந்தமையால் அரசன் அவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தான்.

அம்பி அறம் வளர்த்த முதலியார் தமிழ்ச்சுவை தேரும் இயல்பு உடையவர். தமிழ்ப் புலவர்களுக்குப் பரிசுகள் வழங்கி ஆதரிக்கும் வள்ளன்மை உடையவர். அவர் தம் ஊருக்கு வரும்போது அக்காலத்தில் சிறிய பகுதியை ஆண்டுகொண்டிருந்த பாண்டிய மன்னனைக் கண்டு அளவளாவிச் செல்வார்.

பெருஞ் சிறப்புப் பெற்று வாழ்ந்த பாண்டியர்களுக்குப்பின் அவர் மரபில் பெயருக்குப் பாண்டிய மன்னனாகச் சிறிய நாட்டுப் பகுதியை ஆண்டுவந்தான் அப் பாண்டியன். அவன் தமிழ்ப் புலமை மிக்கவன். நல்ல கவிஞன். அறம் வளர்த்த முதலியார் பேரரசனுடைய பிரதானியாக இருந்தமையால் அவருடைய நட்புத் தனக்குக் கிடைத்ததைப் பெரிய சிறப்பாகக் கருதினான் அவன். முதலியாரும் பாண்டியனுடன் மனம் கலந்து பழகி இன்புற்றார்.

சில நூல்களை இயற்றினான் பாண்டியன். அம்பி அறம் வளர்த்த முதலியாரைப் புகழ்ந்து ஒரு சிறிய நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/92&oldid=1207749" இலிருந்து மீள்விக்கப்பட்டது