பக்கம்:முந்நீர் விழா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒத்த மரபு

85

“யாரைப் பாடினான்?"

"சிறு குடி கிழான் பண்ணனைப் பாடியிருக்கிறான். யான் வாழும் வரைக்கும் பண்ணனும் வாழட்டும் என்று அந்த வேளாண் செல்வனைப் பாடியிருக்கிறான்."

புலவர் சற்றே யோசித்தார். பிறகு, "ஏதோ ஒரு பாட்டு, அரைப்பாட்டு அவசியமான சந்தர்ப்பத்தில் பாடியிருக்கலாம். ஆனால் இப்படி ஒரு முழுநூலே யாரும் பாடியிருக்கமாட்டார்கள். நீங்கள் உங்களைக் குறைத்துக் கொண்டது மட்டும் அன்று பாண்டிய மரபின் பெருமைக்கே இது இழுக்கு” என்று மிடுக்குடன் பேசி விட்டார். சோழனை உதாரணம் காட்டியதனால் வந்த ரோசம் அப்படிப் பேசத் தூண்டியது.

பாண்டியன் சற்றே நிதானித்தான். புலவருடைய படபடப்பு அடங்கட்டும் என்று காத்திருந்தான். பிறகு மெல்லப் பேசத் தொடங்கினான்

"புலவரே, உங்கள் மணம் எனக்குத் தெரியும். எங்கள் மரபுகள் உயர்வு தாழ்வுடையவை, சமானமானவையல்ல என்று நினைக்கிறீர்கள்."

"நினைப்பது என்ன? யாருமே சொல்வார்களே!"

"நான் அப்படி நினைக்கவில்லை. எங்கள் மரபு ஒன்றற்கொன்று ஒத்து நிற்பவை."

"எப்படி?"

"சொல்கிறேன். பாண்டிய மரபு சந்திரகுலம் அல்லவா?”

"ஆம்."

"அறம் வளர்த்த முதலியார் வம்சம் இன்னதென்று உங்களுக்குத் தெரியுமா?" -

"வேளாண் குலம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/94&oldid=1207765" இலிருந்து மீள்விக்கப்பட்டது