பக்கம்:முந்நீர் விழா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

முந்நீர் விழா


"அவர்களுடைய குலத்துக்கு முதல் யார் என்று தெரியுமா?”

"அவர்களைக் கங்கா குலத்தினர் என்று சொல் வார்கள்."

"நாங்கள் திங்களின் வழிவந்தோர். அவர்கள் கங்கை வழி வந்தோர். எங்கள் இருவர் மரபுக்கும் மூலமாக இருப்பவர்கள், ஒத்த நிலையில் உள்ளவர்கள். பரமேசுவரனே அவர்கள் சமானமானவர்கள் என்றுகருதித் தன்னுடைய சடைமுடியில் அவர்களுக்கு இடம் கொடுத்திருக்கிறான். கங்கையும் திங்களும் இறைவன் திருமுடியில் அருகருகே சமானமாக விளங்குவதை யார் அறியமாட்டார்கள்? இறைவனே திங்களும் கங்கையும் ஒப்புடையவர்கள் என்று தலையாலே தாங்கிக் காட்டும்போது அவ்விருவர் மரபும் ஒப்புடையன, உறவுடையன என்று நாம் கொள்வது பிழையாகுமா? இது தெரிந்துதான் நான் பாடினேன்” என்று பாண்டியன் முடித்தபோது புலவர் வாய் அடைத்து நின்றார்.

பாண்டியன் தன் கருத்தை ஒரு பாட்டாகவே பாடி விட்டான்.

உங்கள் மனம்தெரி யும்புல
வீர்!ஒரு சீர்மரபோம்;
திங்கள் மரபினம்; திங்களின்
கூடச்செம் பூர் அறமா
துங்கன் மரபினிற் கங்கையும்
சூடினன் சோதியன்றோ
எங்கள் மரபொன் றெனக்கவி
பாடினம் யாம்அவற்கே. . .

(ஒரு சீர் மரபோம் - ஒரே சீருள்ள மரபினை உடையோம், திங்கள்-சந்திரன். அறமாதுங்கன்-அறம் வளர்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/95&oldid=1207773" இலிருந்து மீள்விக்கப்பட்டது