பக்கம்:முந்நீர் விழா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமைச்சர் முத்திருளப்பர்

89


கடிதம் எழுதினர். அவ்வாறு எழுதும் கவிக்குச் சீட்டுக் கவி என்று பெயர்.

புலவர் சில நாள் தம்முடைய கடிதத்துக்கு விடைவரும் என்று எதிர்பார்த்து ஏமாந்தார். மறுபடியும் ஒருபாடற் கடிதம் எழுதினார்.

நான் எழுதிய கடிதம் தெளிவாக இல்லையா?பாடலாக அல்லவா எழுதியிருக்கிறேன்? படிக்கத்தெரியாமல் கிறுக்கி எழுதினேனோ? உன்னைப் பாடும்பாவாணர் எழுத்திலே கிறுக்கு வர நியாயம் இல்லையே. உன்னால் அச்சுறுத்தப்பட்ட வேந்தருக்குத்தான் உன் ஆணைக்குப் பயந்து மதி மயக்கமாகிய கிறுக்குவரும். உன் நாட்டில் திருடின கள்ளர்களுக்குக் கிறுக்கு வரும். நீதி தப்பித் தலைமறைவாக இருக்கின்ற பேர்களுக்குக் கிறுக்கு வரும். என் ஒலையிலே கிறுக்கு வராதே! அப்படி இருக்க நீ விடை எழுதாத காரணம் என்ன?என்ற கருத்தை அமைத்து அதை எழுதினார்.

உறுக்குமதி வேந்தருக்கும், கள்வருக்கும்,
நீதிதப்பி ஒளிக்கின் றோர்க்கும்
கிறுக்குவரச் செயுந்துரையே, பாவாணர்
ஒலையினும் கிறுக்குண் டாமோ?
பொறுக்கும்அர சுரிமைமுத்து ராமலிங்க
சேதுபதி பூமி எல்லாம்
நிறுக்குமதி மந்திரிமுத் திருளப்பா,
அருளப்பா நிருபந் தானே.

என் பாட்டிலே கிறுக்கு இல்லை; ஒருகால் உனக்குத் தலைக்கிறுக்கு இருக்கலாமோ என்னவோ? அது உன்னால் தண்டிக்கப்பட்டவர்களுக்கல்லவா வரவேண்டும்?' என்ற குறிப்பும் இதில் அடங்கியிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/98&oldid=1207798" இலிருந்து மீள்விக்கப்பட்டது