பக்கம்:முந்நீர் விழா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

முந்நீர் விழா



2


ரு முறை முத்திருளப்ப பிள்ளையிடம் சில ஏழைகள் வந்து தங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்றும், அதற்குப் பொருள் இல்லையென்றும் முறையிட்டுக் கொண்டார்கள். அவர்களுடைய நிலை கண்டு அமைச்சர் மணம் இரங்கினார். 'நம்மிடம் துணிந்து வந்து தம் குறையைத் தெரிவித்துக் கொள்கிறார்கள் இவர்கள். இவர்களை அல்லாமல் இன்னும் எத்தனை ஏழைகள் தம்முடைய வறுமையை வெளியிலே சொல்லாமல் வாடுகிறார்களோ! என்று எண்ணிப்பார்த்தார்.

உலகத்தில் ஏழைகளும் செல்வர்களும் அருகருகில் இருப்பது இயல்பாகப் போய்விட்டது. அதை மாற்றுவது அவ்வளவு எளிதன்று. ஆனால், பணம் இல்லாமையால் எத்தனை கன்னிப் பெண்கள் தமக்குரிய மணாளர்களோடு வாழவகையில்லாமல் தத்தளிக்கிறார்கள்! இதை நினைக்கையில் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதி உண்டாயிற்று. தம்முடைய நாட்டில் மணப் பருவத்தில் இருக்கும் பெண்களுக்கெல்லாம் அரசாங்கத்தின் ஆதரவில் தருமமாகக் கல்யாணம் செய்துவைத்துவிடலாம் என்று எண்ணினார். அது ஒருவாறு நடைபெறக்கூடிய காரியம் என்று நம்பினார்.

முரசங்கள் முழங்கின. திருமணப் பருவமுள்ள ஏழைப் பெண்களுக்குத் திருமணம் இன்ன நாளில் முடிக்கப் பெறும் என்ற செய்தி எங்கும் பரவியது. பல ஏழைப் பெண்கள் தமக்கு விடிவு காலம் வந்துவிட்டதென்று மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அமைச்சர் தாம் எண்ணியதை எண்ணியபடியேசெய்து நிறைவேற்றினர். அவர் மனத்திண்மை உடையவர். அதைக் கண்டு நாடே மகிழ்ந்தது. புல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/99&oldid=1207806" இலிருந்து மீள்விக்கப்பட்டது