பக்கம்:முருகன் அருள்மணி மாலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X

ஒரளவு சூசனையாகக் காட்டும்பொழுதே பாடல்களில் பொதிந் துள்ள உணர்ச்சிபாவத்தை நன்குவாங்கி உணர்ந்துகொள்ளக் கூடிய திறமையும் இவரிடத்திலே நன்கு அமைந்திருக் கின்றன. அனுபவித்து அதன் விளைவாக இசை வடிவத்தை அமைப்பதில் இவருக்கு மிக நல்ல திறமை இருக்கின்றது. எனது குருநாதர் இசைவகுக்க.எனக்கு உதவிய பாடல்கள் அல்லாமல் இந்நூலிலே புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பாடல் கள் இவருடைய உதவியால் இசையமைப்புப் பெற்றவை. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு உண்ர்ச்சி பாவங் களுக்கு ஏற்ப ஸ்வரசஞ்சாரங்களையும், சங்கதிகளையும் பல முறை மாற்றிச் செப்பனிட்டு இருவருக்கும். மனநிறைவு ஏற் படும்வரை சலியாது உழைக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இருவருக்கும் அளித்தது இறைவனுடைய பெருங்கருணை

யாகும். நல்லதாகச் செய்யத் தூண்டி அதைத் தன்னுடைய திருவடி மலர்களை அணிசெய்யுமாறு வைத்துக்கொள்வது அவனுடைய ஆசையென்பது இந்த முயற்சியில் ஈடுபடும் காலத்திலெல்லாம் கிடைத்த இன்ப அனுபவமாகும். சங்கீத வித்வான் திரு. டி. கே. கோவிந்தராவ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை இத்தருணத்தில் செலுத்திக் கொள் கிறேன். - -

முருகன் அருள் மணிமாலை என்றஇந்நூலிலே இரண்டு இராகமாலிகைகளும், காவடிச்சிந்தாக அமைந்த இரு பாடல். களும் உள்ளன. அழகுத் தெய்வமாக வந்து' என்ற காவடிச் சிந்து சென்ற ஆண்டு பழநி சென்றபோது உருவானது. திரு வான்மியூர் மருந்தீஸ்வரன் அருளிய மருந்தீச்வரனே' என்ற பாடல், நங்கநல்லூர் சர்வமங்களா ராஜராஜேசுவரி அருளிய ஆநந்த பைரவிக் கீர்த்தனை, இவ்வாறு ஒவ்வொருகீர்த்தனைக் கும் பெரும்பாலும் ஒரு வரலாறு உண்டு. அது விரிக்கில் பெருகும் என்று கூருது விடுகின்றேன். -

- - சிவபெருமான்மீது பாடிய, இராகமாலிகை நிந்தாஸ்துதி யாக அமைந்தது. பித்தன் என்று கூறுகின்ற புத்தன்யும்