பக்கம்:முருகன் அருள்மணி மாலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் உயர் திரு. பி. ஸாம்பமூர்த்தி,

பி. ஏ., பி. எல்.,

அவர்கள் இந்நூலுக்கு அன்புடன் அளித்த அணிந்துரை

தற்காலத்திய இயல் இசைப் புலவர்களில் பெரியசாமித்துரன் அவர்களுக்கு ஒரு தனி இடம் ஏற்பட்டுள்ளது. நிறைய உருப்படிகளை அவர் இயற்றியிருக்கிருர். அவர்களின் இசையமைப்பு போற்றத்தக்க முறையில் அமைந்துள்ளன. அவற் றின் ஸாஹித்தியங்களில் பக்தி என்னும் நறு மணம் வீசுகின்றது. கேட்குங்கால் நமக்கு பக்தி பரவசம் உண்டாகிறது,

முருகன் அருள்மணிமாலை என்னும் புத்தகத்தி லுள்ள பாட்டுக்களெல்லாம் உள்ளம் பொங்கி வந்தவை. இசையும், சாஹித்யமும் ஒன்று சேர்ந்து ஒரு சிறு நதியைப்போல் செல்கிறது. சில பாட்டுக்கள் மனேகரி, ரஸிக ரஞ்சனி, ராக வினோதினி போன்ற அபூர்வ ராகங்களில் அமைக் துள்ளன.

இந்தப் புத்தகத்திலுள்ள பாட்டுக்களெல்லாம் ஸ் வர, ஸாஹித்ய, தாளக் குறிப்புகளுடன் கொடுத்திருப்பதில்ை பலர் இவைகளை சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம். இம்மாதிரி உயர்ந்த பணிக்கு எல்லாரும் ஆதரவு கொடுக்கவேண்டும்.

சென்னை.4. o 30–10–72 பி. ஸாம்பமூர்த்தி