பக்கம்:முருகன் அருள்மணி மாலை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V 11

கிருர். காவடிச்சிந்து இரண்டும், இராகமாலிகைகள் இரண்டும் உள்ளன. நன்கு பழக்கப்பட்ட ராகங்களில் உருப்படிகளை அமைத்திருப்பது பாராட்டுதற்குரியதாகும். கணபதி தோத் திரத்தோடு தொடங்கி கலியுகவாதனை முருகப்பெருமானைப் பற்றிய பாடலோடு இந்நூல் இனிது முடிகின்றது.

வித்வான்கள் எளிதாகக் கையாளக்கூடிய வகையில் சாகித்தியமும், இசையும் நன்கு அமைந்திருக்கின்றன. வர்ண மெட்டுகளும் தனித்தன்மை பெற்றிருக்கின்றன.

திரு. தூரன் அவர்கள் தமிழுக்குப் பல வகையான அரிய சேவை செய்திருக்கிருர். இவருடைய இலக்கிய சேவையை நன்கு மதித்து இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மபூஷண் என்ற விருதை அளித்திருக்கிறது. சங்கீத உலகிற்கும் இவ ருடைய சேவை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். இப்பாடல்களை வித்வான்கள் தமது கச்சேரிகளில் பயன் படுத்துவார்கள் என்பதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேக மில்லை.

திரு. துாரன் அவர்கள் மேலும் பல பாடல்களை இயற்றி இசை உலகுக்கு அளிக்கவேண்டும்; அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் என்று மனமாரப் பிரார்த் திக்கிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்தையும் மகிழ்ச்சி யோடு வழங்குகின்றேன்.

முசிரி சுப்ரமணிய ஐயர்