பக்கம்:முருகன் காட்சி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 00 முருகன் காட்சி

ஏன்? அவன் கண்ட காட்சியின் மாட்சியினைக் கச்சியப்பர் வாக்காலேயே காண்போம்:

முண்டக மலர்ந்த தன்ன

மூவிரு முகமுங் கண்ணும் குண்டல கிரையுஞ் செம்பொன்

மவுலியுங் கோல மார்பும் எண்டரு கரமீ ராறும்

இலங்கெழிற் படைகள் யாவுந் தண்டையுஞ் சிலம்பும் ஆர்க்குஞ்

சரணமுங் தெரியக் கண்டான்.

-கந்தபுராணம்: இரண்டாநாட்: 235 இவ்வடிவு தெரியக் கண்ட சூரனின் தவத்தின் பேற் றினை யாரால் அறிந்து உரைக்க முடியும்? போருக்குப் பொருக்கென வந்த சூரனுக்கு எளிதாய்த் தன் வடிவம் காட்டியருள் செய்த ஆதியங் குமரனின் மாயத் திருவிளை யாடல் இதுவாகும்.

பலவாறும் போர் செய்து களைத்த சூரன் இறுதியில் அழிவுற்றான். உடல் இருகூறாகிச் சேவலும் மயிலுமானது. மாயையின் மைந்தன் தீயவை புரிந்தவனாயினும் திரு முருகன் திருமுன் உற்றதால் அவனருள் பெற்றுய்ந்தான். இதனைக் கச்சியப்பர், o

தீயவை புரிந்தா ரேனுங்

குமரவேள் திருமுன் உற்றால் துாயவ ராகி மேலைத்

தொல்கதி யடைவர் என்கை ஆயவும் வேண்டுங் கொல்லோ

அடுசமர் இங்காட் செய்த மாயையின் மகனும் அன்றோ

வரம்பிலா அருள் பெற் றுய்ந்தான் -கந்த புராணம்: சூரபன்மன் வதைப்படலம்: 496 என்று நயம்பட நவிலுகின்றார். பின்னர், சேவல் கொடி யாயிற்று; மயில் ஊர்த்தியாகி முருகனைச் சுமந்தது.