பக்கம்:முருகன் காட்சி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O2 முருகன் காட்சி

இவ்வாறு கூறிப் பின்னர் வள்ளியை வலிந்து மணம் செய்து தணிகைமலை உறையும் கோலக் குமரனை !

சிறக்கப் பின்வருமாறு வாழ்த்துகின்றார் கச்சியப்பர்:

ஆறிரு தடங்தோள் வாழ்க

அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க

குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க

யானைதன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க

வாழ்க சீர் அடியார் எல்லாம். கச்சியப்ப சிவாசாரியரின் இந்த வாழ்த்துப் பாடல் இலக்கிய உலகின் இணையற்ற பாடலாகும். இத்தகு ஞாலம் புகழும் கோலக் குமரனின் வன்காதை தன்னைச் சொற்றாரும் ஆராய்ந்திடுவாரும், கற்றாரும் கற்பான் முயல் வாரும் கசிந்து கேட்கல் உற்றாரும் வீடு பேறு பெறுவர் என்று கூறிக் கந்த புராணத்தை முடிக்கிறார் கச்சியப்ப முனிவர்.

கக்சியப்பர் காட்டும் முருகன் செறுநரைத் தேய்த்து உறுநரைக் காத்து, வேண்டுவோர்க்கு வேண்டுவன ஈயும் கருணை வள்ளலாகக் காட்சியளிக்கிறான் என்பது வெளிப் படை. நூலின் முடிவில் இடம்பெறும் கச்சியப்பரின் வாழ்த்துப்பாடல் விழுமியது; உலகம் வாழ வேண்டும் என்னும் உயர் கருத்துடன் ஒளிர்வது.

வான்முகில் வழாது பெய்க!

மலிவளம் சுரக்க, மன்னன் கோன்முறை அரசு செய்க!

குறைவிலா துயிர்கள் வாழ்க! நான்மறை அறங்கள் ஓங்க! நற்றவம் வேள்வி மல்க! மேன்மைகொள் சைவ நீதி

விளங்குக உலக மெல்லாம்