பக்கம்:முருகன் காட்சி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அருணகிரிநாதர் காட்டும் முருகன்

நினைக்கவே முத்திதரும் தலம் திருவண்ணாமலை ாகும். கி. பி. 1450 ஆம் ஆண்டில் விஜய நகரத்தை ஆண்ட பிரபுடதேவராயர் காலத்தவர் அருணையாம்பதியில் த்ெத அருணகிரியார். இளமையிலேயே திருமுருகாற்றுப் படை, தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருக்குறள், ாப்பருங்கலக் காரிகை முதலிய நூல்களை நன்கு கற்றார். பிறு பிரபந்தங்களாகிய உலா, கலம்பகம், கோவை, சிந்து, நாது, பரணி, மடல், ஏசல், மாலை முதலிய நூல்களை ான்கு பயின்றார். எனவே முற்றக் கற்றுத் துறைபோய புலவராய் விளங்கினார்.

செல்வர்கள் மீது துதி பாடிப் பொருட்பரிசு பெற்று அப்பொருளினைப் பொருட் பெண்டிர்பால் தந்து காமுகராக இளமையில் இருந்தார் என்று இவர் நூல் கொண்டு அகச் சான்றாய்க் கூறுவர். ஆயினும் மாணிக்க வாசகர் போன்ற பெரியவர்கள் தங்களை இழிந்தவர் களாகக் கூறிக் கொண்டு தங்களுக்கும் எளிவந்த இறைவனின் இணையிலாக் கருணையை நன்றிப் பெருக்குடன் நினைந்து பாடுவதுண்டு. அம்முறையிலும் இவர் பாடல் அமைந்தனவாகலாம். பெரியவர் ஒருவர் கம் உபதேசத்தால் இவர் மனந்திருந்தினார் என்றும் கூறுவர். இப் பெரியவர் பெயர் பெரிய குணதரர் என்பர். சிவபிரானை இவர் திருச்சிராப்பள்ளித் திருப்புகழில், ‘திரிசிர குன்றில் தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ (திருப் : 342) என்று குறிப்பிட்டுள்ளமை கொண்டு நிருவண்ணாமலையிற் கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் உண்ணாமலை யுமையாளோடு உடனாகிய வருவனாகிய அருணாசலம் எனப்படும் அருணாசலேசுவரர்