பக்கம்:முருகன் காட்சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘i 04 முருகன் காட்சி

என்றும் அறிஞர் குறிப்பிடுவர். வே ைசயர் மயல் மேலாய வெடுக் கெடுத்து மகாபிணி மேலிட முடக்கி வெட்ப மதாமத வீணன் எனத் தம்மைத் தம் பாடலில் குறிப் பிட்டுக் கொள்ளும் இவர் முருகப் பெருமானுக்கு வழிவழி . தொண்டாற்றும் குலத்தினில் வந்தவராதலால் ஏழைத தொழும்பனேன், எத்தனையோ காலமெல்லாம் பாழுக கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே’ என்று, காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கப் பாடிய மாணிக்கவாசகர் போன்று, * சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் எனக்கு வரந்தருவாய்’ என்று முருகப் பெருமானை வேண்டி , திருவண்ணாமலை பெரிய கோபுரத்து வடவாயிலில் தவங் கிடந்தார். ஆறுமுகன் தனக்குப் பன்னாள் ஆகியும் திருவருள் சுரக்கவில்லையே என மனம் கவன்ற இவரி அருணைத் திருக்கோயிலின் கோபுரத்தின் மீதேறிக் குதித்துத் தம் உயிரை மாய்க்க எண்ணி, எண்ணிய வாறே செயல்பட்டனர். அடியவர்க்கு அருளவரும் ஆறுமுகனும் அன்பருக்கு யாதோர் ஊறும் நேரிடாது தமது திருக் கரத்தால் தாங்கிப் பிடித்து அஞ்சல் ஒம்புமதி’ என அபயம் அளித்தனர். நாதன்’ என்ற பட்டத்தினையும் அளித்தனர். இதனை அருணகிரியார் - அகமதை எடுத்த சேமம் இதுவோ என் றடியனு நினைத்து நாளும், உடலுயிரி விடுத்தபோதும் அணுகி என்று தம் திருப்புகழில் குறிப் பிட்டுள்ளார். சும்மா இரு; சொல்லற என்ற மெளவ உபதேசமும் முருகன் மொழிந்தார்; பின்னர், நமது பாக மலரைப் பாடுக என்று அருணகிரியாருக்குக் கட்டளை யிட்டார். எங்ஙனம் ஏழையேன் தங்களைப் பாடுவேன்’ என்ற அருணகிரியாருக்கு முத்தைத் தரு பத்தித் திருங்கை’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் தமிழ்த் தெய்வமாம் முருகன். முருகன் திருவருளையே துணையாகக் கொண் அருணகிரியாரும் : முத்தைத் தரு பத்தித் திரு நகை’ என கி.

தொடங்கும் பின்வரும் சந்தப் பாடலைப் பாடினார்: