பக்கம்:முருகன் காட்சி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 முருகன் காட்சி

பிரபுடதேவராயனும் அருணகிரியாரை அழைத்து : தவச் சிரேட்டரே! தங்களைக் காத்தருளி கருணாமூர்த்தியான கந்தப் பெருமானை நாங்களும் காணக் காட்டி அருளுக’ என வேண்டினான். இது கேட்ட சம்பந்தாண்டான் அரசனிடம் சென்று, யார் ஒருவர் தாம் வணங்கும் மூர்த்தியை அவைக்கு வரவழைக்கின்றனரோ அவருக்குத் தான் நீங்கள் அன்பு செய்தல்வேண்டும்’ என்று கூறினன். அரசனும் இசைந்தனன்; அருணகிரியாரும் ஆண்டவன் திருவருள் போல என்று கூறி இசைந்தனர். சொன்னபடி சம்பந்தாண்டான் தேவியை அழைக்க இயலாமல் தோற்றுப் போனான். அருணகிரியார் . கந்தப் பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே! கந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் வருவானே’ என்று வேண்டி. முருக! இங்குள்ள மன்னன் மனம் மகிழ நீ எதிர் தோன்றி, பாதலத்தில் உள்ள சேடனா ராட, மேரு ஆட, காளி யாட, சிவனாட, பூதவேதாளம் ஆட, வாணி ஆட, பிரமன் ஆட, வானுளோர் ஆட, மதியாட, மாமியா ராட, மாமனா ராட, மயிலு மாடி நீ யாடி வரவேணும் என்ற கருத்துப்பட அதல சேடனா ராட’ எனத் தொடங்கும் பாடலைப் பாட, முருகப் பெருமானும் திருக்கையில் வேல் தாங்கி, மயில் மீது அமர்ந்து மன்றிலே காட்சியளித்து மறைந்தான். இதனை விருத்தாசலத் திருப்புகழில் :: உலகினில் அனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒரு நொடிதனில் வருமயில் வீரா” என்று அருணகிரியார் குறிப்பிட்டுள்ளார். -

திருவண்ணாமலையில் சந்தத்திருப்புகழ்ப் பாடல்கள் .பல பாடிப் பின்னர்த் தென்திசைப் பயணத்தினை மேற் கொண்டார். திருக்கோவலூர், திருவெண்ணைய் நல்லூர், திருநாவலூர், திருவாமூர், வடுகூர்; துறையூர், திருவதிகை, திருப்பாதிரிப் புலியூர், திருமாணிகுழி, தில்லை, திருவேட் களம், சீகாழி முதலிய பதிகளை வணங்கிச் சென்றார். திருவாரூர், சிக்கல், நாகப்பட்டினம், வேதார ணியம்,