பக்கம்:முருகன் காட்சி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. குமரகுருபரர் காட்டும் முருகன்

திக்கெலாம் புகழும் திருநெல்வேலியிலே தாமிரபரணி ஆற்றின் வடகரையில் பூரீ வைகுண்டம் என்ற அழகுத் திருநகரின் வடபால் பூரீ கைலாசம் என்றொரு பகுதியில் சைவ வேளாளர் குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. முருகனின் பழவடியாராய் விளங்கியது அக்குடும்பம், முருகன் திருவடியார் என்பதற்கேற்பத் தண்டாத தமிழ்ப் புலமையும் அக் குடும்பத்திற்கு மிக்கிருந்தது. இக் குடும்பத்தில் வந்த சண்முகசிகாமணி கவிராயருக்கும் அவர்தம் அருமை மனையாட்டி சிவகாமசுந்தரி அம்மைக்கும் பிறந்தது ஒl ஆண்குழந்தை, அக்குழந்தையே நம் குமரகுருபரர்.

ஐந்து வயது வரையில் பிறந்த குழந்தை ஒன்றும் பேசாமல் ஊமையாக இருந்தால் பெற்றோர்க்கு எப்படி இருக்கும்? அவர்கள் மனம் அலையிடைத் துரும்பெனக்’ கலங்கியது. பெற்றோர்கள் குழந்தையைத் திருச்செந் துருக்கு எடுத்துச் சென்று, செந்திலாண்டவன் சந்நிதி யில் கிடத்திப் பாடுகிடந்தனர். கந்தவேளின் கருணை மழையால் பேசாத குழந்தை பேசிற்று; பேசமட்டுமா செய்தது? கல்வி கேள்வியிற் சிறந்து கவி பாடவும் தொடங்கிற்று.

செந்திற்பதிவாழ் கந்தவேளின் கருணைப் பெருக்கால் பேசும் திறம் பெற்றதால் முதன் முதலாகக் குமரகுரு பரர் அப்பெருமான் மீது கந்தர்கலிவெண்பா பாடினார். முருகப் பெருமானும் சிவபெருமானும் வேறல்லர் என்றும், இருவரும் ஒருவரே என்றும் கொள்கையுடையவரி குமரகுருபரர். எனவே இவர் கந்தர் கலிவெண்பாவில் இவனுக்குரிய இயல்புகளை முருகன் மீது ஏற்றிப் பாடி யுள்ளார். திருமுருகனின் வடிவழகினைச் சிறப்புறக் கந்தா