பக்கம்:முருகன் காட்சி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரகுருபரர் காட்டும் முருகன் 1 15

முருகப் பெருமானின் எழுதற்கரிய இயற்கை எழிலினை + முருகனடியார்கள் விழிகளிலும் மனத்திலும் எழுதி எழுதி இன்புறுவார்கள் என்பதனை,

வடிவினழகு மெழுத வரிய

புயமு கறிய செச்சையும் மருமம் விரவு குரவு மரையின்

மணியு மணிகொள் கச்சையும் கடவு மயிலு மயிலு மொழுகு

கருணை வதன பத்மமும் கமல விழியும் விழியு மனமு

மெழுதி யெழுதி கித்தலும் அடிக ளெனவு னடிகள் பணியு மடியர்.

-முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் : 5.10 என்ற பாடலில் புலப்படுத்தியுள்ளார். ---

இப்பாடலைப் படிக்கும்பொழுது முருகனின் அழகுத் விருக்கோலம் நம் கண்முன்னால் வருகின்றதன்றோ? இதுவே குமரகுருபரர் காட்டும் முருகனின் மாறாத இளைய

அழகிய திருக்கோலமாகும்.