பக்கம்:முருகன் காட்சி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வள்ளலார் காட்டும் முருகன்

அன்னம் பாலிக்கும் தில்லைப்பதிக்கு வடமேற்கே மருதுரர் என்றோர் ஊர் உண்டு. தென்னார்க்காடு மாவட் டத்தில் உள்ள இவ்வூரில் சுபானு ஆண்டு புரட்டாபிக் திங்கள் 21 ஆம் நாள் (5.10.1823) ஞாயிற்றுக்கிழமையன்று இராமையா பிள்ளைக்கும் சின்னம்மாளுக்கும் பிறந்த பிள்ளையே நம் அருட்சோதி இராமலிங்க வள்ளலாவா அவர் பிறந்த வேளையில் ஒர் ஒளி தோன்றியது என்றும், தேவர்கள் பூமாரி பொழிய, அடியவர்களாம் அன்பர்கள் அகமகிழ்ந்தனர் என்றும் கூறுவர்.

பள்ளிப் படிப்பில் இராமலிங்கம் பிள்ளையின் மனம் செல்லவில்லை. ஒதாது உணர்ந்த பெரியவர்கள் து எல்லைக் குட்பட்ட கல்வியில் கட்டுண்டிருப்பரோ! இளமையில் இராமலிங்கர் தன் அண்ணன் சபாபதிப் பிள்ளையோடு தங்கியிருந்தார். அண்ணன் வாழ்ந்தது தருமமிகு சென்னையாகும். அவர் குடியிருந்த சென்னை ஏழுகிணறு வட்டத்து வீராசாமிப்பிள்ளைத் தெரு, 39ஆம் எண் இல்லத்து மாடியில் அண்ணியாரின் துாண்டுதலால் தாமே கல்வி பயிலத் தொடங்கினார் இராமலிங்கர்.

இராமலிங்கரின் சற்குரு சுவாமிநாதன் என்றும் தகப்பன்சாமி என்றும் குருநாதன் என்றும் குருசாமி என்றும் கூறப்படும் முருகப் பெருமானே ஆவர். யாவற்றுக்கும் மூலமதாய் விளங்கும் பிரணவப் பொருளினை . தந்தைக்கே உபதேசித்த பெருமான் அன்றோ அவா! *திருவருட்பாப் பெருநூல் நம் இராமலிங்கர் முருகப் பெருமானைக் கண்ணாடியில் கண்டு அவர் அருளால்