பக்கம்:முருகன் காட்சி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 முருகன் காட்சி

திருத்தணிகைப் பெருமானை நாடோறும் பரவி به MA பட்டு வந்தார் இராமலிங்கர். எனவேதான் தணிகை

நாதரின் தண்டைச் சிலம்படி காணத் தவம் கிடந்தார்.

பண்ணேறு மொழியடியர் பரவி வாழ்த்தும்

பாதமலர் அழகினை இப்பாவி பார்க்கில்

கண்ணேறு படுமென்றோ கனவி லேனும் -

காட்டென்றால் காட்டுகிலாய் கருணைஈதேன.

என்று நெக்குருகிப் பாடித் தணிகைப் பெருமானிடத்துக் தாம் கொண்ட தணியாத காதலைத் தடைபடாத பாட்டோட்டம் அமைந்த பின்வரும் பாடலில் கல்லும் கனிய எடுத்து மொழிந்துள்ளார்:

செய்கொள் தணிகை நாடேனோ

செவ்வேள் புகழைப் பாடேனோ

கைகள் கூப்பி ஆடேனோ

கருணைக் கடலில் நீடேனோ

மெய்கொள் புளகம் மூடேனோ

மெய்அன் பர்கள்பால் கூடேனோ

பொய்கொள் உலகோ டுடேனோ புவிமீ திருகால் மாடேனோ.

இராமலிங்க வள்ளல் கண்ட கருணை வள்ளலாம் கந்தப்பெருமானின் கண்ணாடித் தரிசனம் அவர் தம் உள்ளத்தில் கவிதை மழையினைப் பெருக்கெடுக்கச் செய்து அருட்பாப் பாடலாகப் பொழிந்து தள்ள அருள் சுரந்தது.