உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 22 முருகன் காட்சி

சொக்கி மரமென கின்றனை

தென்மலைக் காட்டிலே

என்று பாடியதோடு அமையாது பாட்டின் இறுதியில்,

ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப

மாகுதே;-கையில்

நீறு படக்கொடும் பாவம் பிணிபசி

யாவையும்-இங்கு

நீக்கி அடியரை கித்தமுங்

காத்திடும் வேலவா!

என்று முருகப் பெருமான் அடியவர்க்கு அஞ்சல் என்று அருளி, பிணி பசி பாவங்களைக் களைந்து காத்து அருள் புரிவான் என்பதனைச் சிறப்புறக் கூறியுள்ளார்.

அடுத்து, முருகன் பாட்டு’ என்ற பகுதியில், வீரத் திருவிழிப் பார்வையும்-வெற்றி

வேலும் மயிலும் என் முன்னின்றே-எந்த நேரத் திலும் என்னைக் காக்குமே. என்று வேலும் மயிலும் துணை’ என்பதனைச் சொல்லி

நமக்கு நல்வழி காட்டுகின்றார். =

ஆறுமுகமும் பன்னிருகையும் விர விழிகளும் வெற்றி வேலும் மயிலும் கொண்ட ஞானத் திருவுருவமே பாரதியார் நமக்குக் காட்டும் முருகன் அருளுருவமாகும்.

கவிமணி

திருச்செந்துார் முருகனிடத்திலே மாறாத பக்தி கொண்டவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் ஆவர். அமரவிளைப் புலவர் சுடலைமுத்துப்பிள்ளை என்பவர் திருச்செந்துருக்குச் சென்று முருகனைத் தரிசிக்கப் போகும் வழியில் கவிமணியைக் கண்டு முருகன் மேல் ஒரு பாடல் பாடியருளுமாறு கேட்டார். அதுபோது கவிமணி பாடிய பாடலில் கழிவிரக்கம் மிகுதியும் காணப்படுகின்றது.