பக்கம்:முருகன் காட்சி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர்கள் காட்டும் முருகன் 1:23

ஒரு செய்யுள் வருமாறு: -

உன்னிடத்தி லன்றி உலகில் எவரிடம்போய் என்னுடைய சங்கடத்தை யானுரைப்பேன்-பன்னிருகை ஏந்துமெழில் செந்தில் இறைவா! உனையன்றி ஆந்துணை வேறுண்டோ ஐயா?

மேலும் கவிமணி அவர்கள் கவிவாணர்கள் வாழ வரந்தர வேண்டும் என்று குறையிரந்து குகனாம் முருகனைப் பரவி வந்திருக்கின்றார்: - i.

செந்தில் முருகா! திருமால் மருகா! என் சிங்தை குடிகொண்ட தேசிகா!-வந்தினிய பைந்தமிழ்ச் சோலையிலே பாடும் கவிக்குயில்கள் சந்ததம் வாழவரம் தா.

அடுத்து மாயன் முருகன்’ என்ற கீர்த்தனைப் பாடவில் கல்லும் கனிந்துருகும் வண்ணம் கந்தவேளை அருளுமாறு வணங்குகின்றார் கவிமணி அவர்கள்.

பல்லவி

ஐயா! நீ அருள் செய்யவேண்டும்-உன்றன் அடியிணை யன்றிவே றொருதுணை அறிவேன்

அநுபல்லவி

ஒய்யார மாமயிலில்

உல்லாச மாகவரும் வையா புரிமருகா

மாயன் திருமருகா! (ஐயா)

சரணம்

வஞ்ச வினைமலியும் உலகில்-வாழும்

வழியறி யாதுநிதம் வந்திடு மெளியேன் அஞ்சிவங் துன்னையே