பக்கம்:முருகன் காட்சி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர்கள் காட்டும் முருகன் 127

உடனெடுப்பு

தெள்ளமுதே தேனே தெவிட்டாத தீங்தமிழே சொல்லற்கரிய இன்பச் சுவையே கனிரசமே (உள்ளமெனும்)

அமைதி, வல்ல குறிஞ்சி நிலம் வாழ்பவனே கந்தா - வளர்இமை யோன்தங்த உமையவள் மைந்தா அல்லும் பகலும்உனை எண்ணிடும் வரந்தா அடியனுக்கு உனது ஞானப் பதந்தா அடியார் தொழும்படியாய்-இளம் வடிவத் தோடெழுந்து - வடியாக் கடலலைவாய்-தனில் துடியாய் நிற்பவனே * - - அமைவாய் மிகு கனிவாய்-முதிர் பழமாய்ப் பழநியிலே. அருளாய்ப் பெரும்பொருளாய்-மன இருள்கீக் கிடும்முருகா அறுமுகனே குருப்ரனே சரவணனே சண்முகனே அனுதினமும் உனைத்தொழவே ஆலயமும் வேண்டிலனே அகத்தினிலே மிகத்தெளிவாய் அமர்ந்துறையும் அன்பரசே இகத்தினிலே இன்பமெல்லாம் என்னுயிரே யேன்றோ! * - - -- என்னுயிரே யேன்றோ!! == -” என்னுயிரே யேன்றோ!! - * இவ்வாறாக இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் முருகன் மாட்சியினை மாண்புற் உணர்ந்து, ஞாலம் உய்ய: ஞானப் பழமாய் இலங்கும் கோலத் திருமுருகனின் காட்சி யினைச் செவ்வனே நமக்குத் தெளிவு பெறத் தம் பாடல்கள். வழியே காட்டியுள்ளனர். *