பக்கம்:முருகன் காட்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

கட்டுண்டு திளைத்துக் கவிதை பாடியவர்களே என்பதனைப் பத்தாவது கட்டுரை உணர்த்தும்.

ஈற்றயல் கட்டுரையாக இலங்கும் கட்டுரை தமிழ்த் தெய்வம்’ என்பதாகும். இக் கட்டுரையில் முருகனின் பிறப்புக்கள் அனைத்தும் ஒருங்கே தொகுத்துக் கூறப் பட்டுள்ளன. அறுபடை வீடுகளைப் பற்றிய குறிப்புக் களும் அக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

இறுதிக் கட்டுரை பாராயணப் பாடல்கள் என்ப தாகும். திருமுருகப் பெருமானின் திருவருளை வேண்டும் அடியவர்கள் நாள்தோறும் பாராயணம் செய்யத்தக்க பாடல்கள் இக்கட்டுரையில் தொகுத்தளிக்கப்படுகின்றன.

தமிழ்க் கடவுளாம் முருகனைப் பற்றி யான் எழுதிய முருகன் காட்சி’ எனும் இந் நூலினைத் தமிழ் கூறு நல்லுலகம் நன்கு வரவேற்கும் என்று நம்புகிறேன். என் செயல்களுக்குத் தோன்றாத் துணையாக நின்றொளிரும் இறையருளை வந்தித்து வணங்குகின்றேன்.

“ஞாலம் கின்புகழே மிகவேண்டும்; தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே” என்றபடி நாளும் சமயமும் தமிழும் தழைத்தினி தோங்கும் வண்ணம், தம் இண்ையற்ற சொல்லாற்ற லால் பல்லாயிரக் கணக்கான தமிழ் நெஞ்சங்களை மகிழ் வித்துவரும் சைவப்பெருந் திருவினர், அருள்மொழி அரசு, திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் ஆவர். வேலை வணங்குவதே எமக்கு வேலை’ என்ற உயரிய குறிக்கோ ளோடு முருக உபாசனையும், தொண்டுள்ளமும், தோழமை நெஞ்சமும் கொண்டு, சைவமும் தமிழும் தழ்ைந்தினிதோங்க அயராது பாடுபட்டு வரும் அண்ணல் திருமுருக் கிருபர்னந்த வாரியார் ஆவர்கள் தம் முடைய இடைவிடாத பயணத்திற்கும் சொற்பொழிவுகளுக்கும் இடைய்ே, யான் எழுதிய முருக்ன் காட்சி’ எனும் நூலிற்கு மனமுவந்து, தம் புல்மையும் அருளும் அன்பும் விளங்க அழகியதோர் அணிந்துரையின்ை வழங்கியுள்ளமைக்கு யான் என்றும் பெருந்ன்றி பாராட்டும் கடப்பாடுடையேன்.

சி. பாலசுப்பிரமணியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/13&oldid=585874" இலிருந்து மீள்விக்கப்பட்டது