பக்கம்:முருகன் காட்சி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தெய்வம் 129

முருகனுடைய திருவவதாரம் உலகு உய்யும் பொருட்டாக நிகழ்ந்ததாகக் கந்தபுராணம் பாடிய கச்சியப்ப சிவாச்சாரியர் நயம்பட நவின்றுள்ளார்:

அருவமு முருவு மாகி

அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் கின்ற சோதிப்

பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்க ளாறுங் - கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே

ஒருதிரு முருகன் வந்தாங்

குதித்தனன் உலக முய்ய.

-கந்த புராணம்: திருவவதாரப் படலம்: 92

முருகு என்ற சொல்லிற்கு மணம், இளமை, கடவுள் தன்மை, அழகு என்ற பொருள்கள் உண்டு. இயற்கை மணமும், மாறா இளமையும், எல்லாப் பொருளையுங் கடந் தொளிருந் தன்மையும், அழியா அழகும் இறை

வனிடத்தில் இலங்குவது கண்டு, அப்பொருள்கள் முறையே உறைதற்கிடம் பெற்றுள்ள முருகன் என்னுஞ் சொல்லை, அவ்விறைவனுக்குப் பழந்தமிழ் மக்கள் சூட்டியதன் திறமையை நோக்குழி அவர்களது

கூர்த்தமதி புலனாகிறது’ என்று தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் முருகக் கடவுளை முழுமுதற் பொரு ளாகப் பழந்தமிழர் கொண்டதன் சிறப்பினைப் பொருத்த முறப் பு:கன்றுள்ளார்.

மக்கள் வாழ்வு முதன் முதல் தொடங்கப்பட்ட இடம் மலை என்பது ஆன்ற அறிஞர்தம் கருத்துரை யாகும். இத்தகு பழைய நிலத்தின் கடவுளினை முருகன் என்று முன்னோர் கூறினர். முருகனுக்குப் பல பெயர்கள் உண்டு. முருகனை அழகன் என்று புலவர் போற்றினர்.