பக்கம்:முருகன் காட்சி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தெய்வம் 1.31

முருகப் பெருமான் செந்நிறத்தவர்; செவ்வடியினர்; செம்பவளம் போல் செக்கச் சிவந்த மேனியர்; குன்றி மணியினைப் போலச் சிவந்த ஆடை உடையவர்: கிரெளஞ்ச மலையைத் தம் வேலினால் பிளந்து, அஞ்ஞான இருளர்ம் சூரனை மாய்த்து இவ்வுலகை அவர் புரக்கின்ற மையின் இவ்வுலக மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்வோடும் வாழ்கின்றார்கள். இவ்வாறு எல்லா வகைக்குற்றமும் நீங்கிய செய்யுள் என்று தமிழ் இலக்கணத்தில் எடுத்துக் காட்டப்படுகின்ற பாரதம் பாடிய பெருந்தேவனாரின் அழகிய பாடல் கூறுகின்றது. அப்பாடல் வருமாறு: .

தாமரை புரையுங் காமர் சேவடி பவழத் தன்ன மேனித் திகழொளிக் . குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின் . நெஞ்சுபக வெறிந்த அஞ்சுடர் நெடுவேற்: . . . சேவலன் கொடியோன் காப்ப . . . . . . . . . . .” ஏம வைகல் எய் தின்றால் உலகே. . , ,

a -குறுந்தொகை : கடவுள் வாழ்த்து.

o ■ -

ஊர்தோறும் ஊர்தோறும் எடுத்துக் கொண்ட தலைமை ப்ொருந்தின விழாவின் கண்ணும், அன்புடை யார் ஏத்த அகமகிழ்ந்து அவன் அருள் சுரக்கின்ற இடத் தினும், வேலன் என்னும் முருக கோயில் பூச்ாரி வழிபாடு ஆற்றுவதற்கு இழைத்த வெறியாடு களத்தினும், காடு, சோலை, ஆற்றிடைக்குறை, யாறு, குளம், பல ஊர்கள், நாற்சந்தி முச்சந்தி ஐஞ்சந்தி, கடம்ப மரம், ஊர்க்குப் பொதுமன்றமாய மரத்தடி, அம்பலம், ஆதீண்டு குற்றி முதலிய இடங்களிலும் முருகன் உறைவதாக நக்கீரர் பெருமான் திருமுருகாற்றுப் படையில் குறித்துள்ளார்: r ;. “ ;

ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும் ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் வேலன் றைஇய வெறியயர் களனுங்

-- I - # - - --

- * **, *.