உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 முருகன் காட்சி

காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறுங் குளனும் வேறுபல் வைப்புஞ் சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்

-திருமுருகு : 220.226

என்று முருகன் உறைவதாக அவர் குறிப்பிடும் இடங்கள் அழகு உறையும் இயற்கை நிலையங்களாகும்.

இவை தவிர, முருகாற்றுப்படையில் ஆறு படைவீடுகள் முருகனுக்குரியனவாகப் பேசப்படுகின்றன. முதலாவதாகப் பேசப்படும் படைவீடு திருப்பரங்குன்றமாகும். சூரனைத் தோற்கடித்து தேவருலகினைக் காத்த முருகனுக்கு, இந்திரன் தான் வளர்த்த தேவசேனை என்னும் நங்கை நல்லாளைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்வித்துக் கொடுத்ததாகக் கந்தபுராணம் கூறும். பழந்தமிழ் நூல் களான பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, மதுரைக் காஞ்சி முதலான நூல்களும் திருப்பரங்குன்றத்தினை முருக வுேள் உறையும் தலமாகக் குறிப்பிடுகின்றன.

பரங்குன்று இமயக் குன்ற நிகர்க்கும்

-பரிபாடல் : 8.11

என்று பரிபாடலிலும்,

‘ ஒன்னாதார்க் கடந்தடுஉ முரவுநீர் மாகொன்ற

வென்வே லான் குன்றின் மேல் விளையாட்டும்

விரும்பாள்கொல்’ கலித்தொகை : 27

என்று. கலித்தொகையிலும்,

சூர்மருங் கறுத்த சுடரிலை கெடுவேற் சீர்மிகு முருகன் தண் பரங் குன்றத்து அங்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை

-- -அகநானூறு : 59 : 10-12 .