134. முருகன் காட்சி
திருமறைக் காடு தேவாரம்,
நஞ் செந்தின் மேய, - வள்ளி மணாளர்க்குத் தாதை கண்டாய். என்று திருச்செந்தூரினைக் குறிப்பிடுகின்றது.
மூன்றாவது படைவீடு திருவாவினன்குடி என்றும் சித்தன் வாழ் மூதுரர் என்றும் சொல்லப்படும். பழநித் திருத்தலமாகும். இத்தல மகிமையினைக் கந்தரலங்காரம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
படிக்கின் றிலைபழ னித்திரு நாமம் படிப்பவர்தாள் முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு படிக்கின்றிலைபர மானந்த மேற்கொள விம்மிவிம்மி க் நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே
- -கந்தரலங்காரம் : 75 இப்பாடல் உ ள்ளம் உருக்குவதாகும். - - = *
நான்காவது படைவீடு திருவேரகமாகும். திருவே. ரகத்தை மலைநாட்டிலுள்ளதொரு திருப்பதி என்றுகறுவர் நச்சினார்க்கினியர். ஆனால் அருணகிரிநாதர் சோழ நாட்டிலுள்ள சுவாமிமலையே இப்பதி என்று கருதியமை, எனவும்,
காவிரி யாற்றுக்கு ளேவரு, வளமைச் சோழகன் னாட்டுக்குள் ஏரக நகரிற் சீர்பெறும் மோட்சத்தை யேதரு பெருமாளே
- - -- . . . . . . . எனவும், * .
யாவு மலைகொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்றும்
ஏரகமமர்ந்த பச்சை மயில்வீரா. - * * * * எனவும் வரும் திருப்புகழ்ப் பாடற்பகுதிகளை நோக்கின், அவர் கருத்துப் புலனாகும். so -
குன்று தோறாடல் எனும் சொல் ஒரு தலத்தைக் குறிக்காமல் குன்றுகள் அனைத்திலும் கோலக்குமரன்