தமிழ்த் தெய்வம் 135
கொலுவீற்றிருக்கிறான் என்பதனை உணர்த்தும். அருண் கிரியாரும் வடிவ தாமலை யாவையு மேவிய தம்பிரானே. எறுைம், பலகுன்றிலு மமர்ந்த பெருமாளே என்றும், பல மலையுடைய பெருமாளே என்றும், குன்று தோறாடல் மேவு பெருமாளே என்றும் தம் திருப்புகழில் குறிப்பிட்டுள் ளமை கண்டு நோக்கற்குரியது. H
o
- * * * *
m”
o’ ஆறாவது படைவீடு பழமுதிர் சோலையாகும். மது ரைக்கு அண்மையிலுள்ள அழகர்மலை பழமுதிர்சோல்ை என்பர். இவ் ஆறு படைவீடுகளையும் திருமுருகாற்றுப் படையின் வரிசை முறையிலேயே கந்தபுராணக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களும், கந்தரந்தாதியின் முதற்செய் யுளும் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரம் , குன்றக்குரவை யில் இளங்கோவடிகள், “. . . . . . . . . .
. . . . . . . . - - - --- * * *
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே
பாரிரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டொருங்ாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே - f: * . . -சிலம்பு; குன்றக் குரவை :8
என்று படைவீடுகளில் சிலவற்றினைக் குறிப்பிட்டுள்ளார்.
சங்க இலக்கியத்தில் குறிஞ்சிநிலத் தலைவி ஒருத்தி தலைவன்மீது கொண்ட காதலால் நலிவுற்று உடல்மெலிந் தால் அத்தலைவியின் தாய் முருகன் கோயில் பூசாரியாகிய வேலன் எனப்படும் படிமத்தானை அழைத்து, தலைவியின் நோய்க்குரிய காரணத்தினை உசாவுவாள். அவ் வ்ேலன் வெறியாட்டு எடுப்பான். வெறியாடும் பொழுது கழற். க்ாயினை மெய்யில் அணிந்து படிமக்கலத்தைத் தூக்கிக் கொண்டு முருகணங்கின் குறையென வேலன் கூறுவான்: