பக்கம்:முருகன் காட்சி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தெய்வம் --- 137

துணையாக முருகனின் மலர்ப்பாதங்களையும், மொழிக்குத் துணையாக முருகா’ எனும் திருப்பெயரினையும், பழிக்குத் துணையாக அவன்தன் பன்னிரு தோளினையும், வழிக்குத் துணையாக வேலினையும் மயிலினையும் முறையே கொள்வர். அருணகிரியார் பாடும் அவ்வழகிய பாடல்

வருமாறு:

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்

பாதங்கள் மெய்மைகுன்றா

மொழிக்குத் துணைமுரு காவெனு

நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு

தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செங்

கோடன் மயூரமுமே.

-கந்தரலங்காரம் : 70,

மேலும் காதிர்காமத் திருப்புகழில் அருணகிரியார் *இதமொழி பகரினும் மதமொழி பகரினும் ஏழைக் கிரங்கும் பெருமாளே (422) என்று ஏழைக்கிரங்கும் ஏந்தலின் இதயத்தினைப் புகழ்ந்துரைத்துள்ளார். மேலும் மொய்தா ரணி குழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதா ரையும்அங்கு வாழவைப் போன் (கந்தரலங்காரம்: 22). என்று முத்தமிழால் வை தாரையும் வாழவைப்பான் என்று தமிழ் பால் முருகன் கொண்ட தனியாத காதலைப் புலப்படுத்துகின்றார். ஊமையாகப் பிறந்து செந்தில் முருகன் அருளால் பேசும்திறம் பெற்ற குமரகுருபரர், முருகன் வள்ளியின் தேனுாறு கிளவிக்கு. வாயூறி நின்றதைக் குறிப்பிட்டு,

விழியாக முன்னின்று தண்ணளி சுரந்தவர்கள்

வேண்டிய வரங்கொடுப்பான்