பக்கம்:முருகன் காட்சி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பாராயணப் பாடல்கள்

==

-Q

திருமுருகப் பெருமானின் திருவருளைப் பெற்று உய்யும் பொருட்டுப் பக்திப் பாடல்கள் பாடிய புலவர் பலர். பாராயணத்திற்குரிய முறையில் அமைந்துள்ள சில பாடல்கள் ஈண்டுத் தரப்படுகின்றன. -

எவரா யிருப்பினும் கார்த்திகேயனிடத்தில் பக்தி பண்ணு பவர் புதல்வன் முதலிய பல பேறுகளைப் பெறுவர் என்று வால்மீகி இராமாயணத்தின் பாலகாண்டத்தில் விசுவா மித்திரர் வாக்காக வியாசர் குறிப்பிடுகின்றார். எனவே பின்வரும் பாடல்களை மனனம் செய்து அன்பர்கள் திரு முருகன் திருவருள் பெற்றுய்வார்களாக. - o

    • - --- - *

நாள்தோறும் பாராயணம் செய்தற்குரியதிரு முருகாற்றுப்படையின் அடியிற் காணும்

வெண்பாக்கள் o குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய் புன்றலைய பூதப் பொருபடையாய்-என்றும் இளையாய் அழகியாய் ஏறுார்ந்தான் ஏறே உளையாயென் னுள்ளத் துறை.

குன்ற மெறிந்ததுவுங் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா கின்றதுவுங் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல். - (2) வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றும் துளைத்தவே லுண்டே துணை. (3)

(1)

- -

-

  • *