பக்கம்:முருகன் காட்சி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40 முருகன் காட்சி

இன்னம் ஒருகால் என திடும்பைக் குன்றுக்கும் கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா-முன்னம் பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவூத் தொட்ட தனிவேலை வாங்கத் தகும். (4) உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை யொருவரையான் பின்செல்லேன்-பன்னிரு கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் (கைக் வேலப்பா செந்திவாழ் வே. (5) அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் கினைக்கில் இருகாலுந் தோன்றும் மூருகாவென் றோதுவார் முன். (6) மூருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே யீசன் மகனே-ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் கம்பியே கைதொழுவேன் நான். (7) காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா-பூக்குங் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல இடங்காண் இரங்கா யினி. (8) பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம் கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு-சுருங்காமல் ஆசையால் நெஞ்சே யணிமுரு காற்றுப்படையைப் பூசையாக் கொண்டே புகல். (9) கக்கீரர் தாமுரைத்த கன்முருகாற் றுப்படையைத் தற்கோல நாடோறுஞ் சாற்றினால்-முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தானினைத்த வெல்லாங் தரும். (10)

திரு முருகாற்றுப்படையை நாடோறும் ஒதும அடியார்கள் மேற்கண்ட வெண்பாக்களோடு கீழ்க் கானும் கட்டளைக் கலித்துறையினையும் ஓதுவர்.