பக்கம்:முருகன் காட்சி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+44

முருகன் காட்சி

ஏறுமயி லேறி விளை யாடுமுக மொன்றே

ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க் குமுக மொன்றே

குன்றுருவ வேல்வாங்கி கின்றமுக மொன்றே மாறுப்டு சூரரை வதைத்தமுக மொன்றே

வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் யேருளல் வேண்டும்

ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.

துய்யதாம் மறைக ளாலுந் துதித் திடற் கரிய ഒ8്കേണ

செய்யபே ரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க வெய்ய சூர் மார்பு கீண்ட வேற்படை வாழ்க அன்னான் பொய்யில் சீ ரடியார் வாழ்க வாழ்க இப் புவன மெல்லாம்.

  • 로 ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் னணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீ ரடிய ரெல்லாம்.
  • † ஆன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலா நன்னெறி யொழுகச் செய்து நவையறு காட்சி நல்கி என்னையும் அடிய னாக்கி இருவினை நீக்கி யாண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி.
  • :: சேல்பட்டழிந்தது. செந்துார் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்

கால்பட் டழிந்திங் கென்றலை மேலயன் கையெழுத்தே

o

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த

கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுங் தண்டையுஞ் சண்முகமுங்

தோளுங் கடம்பு மெனக்கு முன் னே வந்து தோன்றி.டினே.