பக்கம்:முருகன் காட்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 முருகன் காட்சி

அருமையும் பெருமையும் வாய்ந்ததாகும். எனவே உச்சி மேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்,

ஆன்றோர் புகழ்ந்த அறிவினிற் றெரிந்து சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒருபது பாட்டும்

என்று பாராட்டுவராயினர்.

மேலும் பேராசிரியரும் பாட்டினுந் தொகையினும் வருமாறு கண்டு கொள்க’ என்று பாட்டையே முதலிற் குறிப்பிட்டுள்ளார். தமிழ் விடு தூது ஆசிரியரும்,

S S S STS STS STS STS STS S S S S S S S S S S S S S S S S S S S மூத்தோர்கள்,

பாடி யருள்பத்துப் பாட்டுமெட்டுத் தொகையுங்

கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்

-தமிழ்விடு துரது : 55, 56

என்று பாட்டையே முதற்கண் கிளத்தியிருக்கின்றார்.

மேலும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் பத்துப் பாட்டில் இல்லது புனைதலில்லாத அளவான கற்பனை யைக் காணலாம் என்கிறார்:

பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

எத்துணையும் பொருட்கிசையும்

இலக்கணமில் கற்பனையே.

-மனோன்மணியம் : பாயிரம்

பத்துப்பாட்டு நூல்கள் இவையிவை என்பதைக் கீழ்க் காணும் பழைய வெண்பா குறிப்பிடுகின்றது:

முருகு பொருங்ாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய கோலநெடு நல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து. சங்கத்த நூல்களில் சிறந்தது பத்துப்பாட்டு என மேலே கண்டோம். அப்பத்துப் பாட்டினுள்ளும் சிறந்ததுதலையாயது. முதலாவதாக வைத்து எண்ணப் பெறுவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/16&oldid=585895" இலிருந்து மீள்விக்கப்பட்டது