பக்கம்:முருகன் காட்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 முருகன் காட்சி

அழகு உறைகின்ற இடமெல்லாம் அம் முருகு கொலு வீற்றிருக்கின்றது என்று கண்டனர். எனவே கொள்ளை யழகு பூத்துக் குலுங்கும் மலைப் பகுதிகளிலெல்லாம்அம் முருகு-அம் முருகன் வீற்றிருக்கின்றான் என்று கண்டு, குறிஞ்சி நிலத் தெய்வமாக அம் முருகனைக் கண்டனர். முருகு’ எனும் இறைப்பொருள் உணர்த்தும் சொல்லோடு அன்’ எனும் ஆண்பால் விகுதிபெற்று முருகன்’ என்று வழங்கப்பட்டது. நிலவுலகம் நானிலம் என்ற பாகுபாடு பெற்ற காலத்தே முதற்கண் தோன்றிய நிலமாகிய மலைக்கு முதன் முதற் தெய்வமாக முருகு கொள்ளப்பெற்றது. இதனையே ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியனாரும்,

மாயோன் மேய காடுறை யுலகமுஞ் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்த லென்று சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

-தொல்காப்பியம்: அகத்திணை இயல்: 5.

என்று கூறிப் போந்தார்.

ஆகவே தமிழின் தொன்னுாலும் முன்னுாலுமான தொல்காப்பியத்திலேயே பழந் தமிழகத்தின் பழைய நிலமான மலைக்குத் தெய்வமாகச் சேயோன்-முருகன் கூறப்படுகின்றான். இதனாலே முருகன் அழகுக் கடவுள் என்பதும் தமிழ்க் கடவுள் என்பதும் தாமே போதரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/20&oldid=585900" இலிருந்து மீள்விக்கப்பட்டது