நக்கீரர் வரலாறு 21
நக்கீரனார் வேள்வி வேட்காது சங்கறுக்குந் தொழிலை மேற்கொண்டொழுகிய அந்தணர் என்பர் மகாவித்துவான் இராகவையங்கார். வேளாப் பார்ப்பார் என்ற சொல், பொற்றொழில் புரியும் மரபினரைக் குறிக்கும். பொற் கொல்லர், தம்மை விசுவப் பிராமணர் என்று கூறிக் கொள்வதும், அகப்பாட்டு உரை காரர் ஊர்ப்பார்ப்பான்’ என்று உரை கூறுவதும் ஈண்டுக் கருதற்குரியன. விசுவம்
என்ற சொல் உலகம் என்னும் பொருண்மைத்து. ஆயினும் நக்கீரனாரை ஒரு குலத்திற்கு உரியவர் என்று தளையிட்டு விடாமல் செஞ்சொற் கவிதை தந்த
அஞ்சொற் கவிஞர்’ என்று கூறுதல் அமைவுடைத்தாகும்.
இவரைச் சைவ சமயத்தினர் என்பர். சைவ நூல்கள் பலவும் இக்கருத்துக்குச் சான்று பகரும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் திருத்தொண்டத் தொகையுள் பொய் யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்” என்று பாடினார். நம்பியாண்டார் நம்பிகள் தாம் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில் பொய்யடிமையில்லாத புலவர்களைக் குறிப்பிடுகின்றபொழுது நக்கீரனார் உள்ளிட்ட சங்கப் புலவர்கள் சிலரைக் குறிப்பிட்டுள்ளார்:
தரணியற் பொய்மை யிலாத்தமிழ்ச் சங்க மதிற்கபிலர் பரணர்நக் கீரர் முதனாற்பத் தொன்பது பல் புலவோர் அருணமக் கீயுந் திருவால வாயரன் சேவடிக்கே பொருளமைத் தின்பக் கவி பல பாடும் புலவர்களே.
இவர்தம் பாடல்களில் சிவபெருமான், மணிவண்ணன், வாலியோன், முருகன், இந்திரன் முதலிய கடவுளர் களைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப. -
-தொல்காப்பியம்: செய்யுள் இயல்: 176