பக்கம்:முருகன் காட்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 முருகன் காட்சி

என்னும் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திரவுரையில் பேராசிரியர், இவை தெற்கண் வாய்திறவாத பட்டி மண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும்

சாவவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின. என எழுதியுள்ளார். இவ்வாறு இவர் உரை கூறினமைக்கு

ஒரு கதை பண்டுதொட்டுக் கூறப்பட்டு வருகின்றது. ஒரு காலத்தே மதுரையம்பதியில் பட்டிமண்டபத்திடை இப் புலவர் பெருமான் வீற்றிருந்தபொழுது குயக் கொண்டான் என்பான் ஒருவன், வடமொழியே சிறந்த தென்றும் தமிழ்மொழி தாழ்ந்ததென்றும் கூறினானாக தண்டமிழிாற்றலின் தன்மையைத் தாழ்த்திப் பேசின. மையைப் பொறாத-தண்ணார் தமிழைத் தம் உயிரினும் மேலாகக் கருதிய நக்கீரனார்,

முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி-அரணியல் ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன் ஆனந்தஞ் சேர்கசுவாகா. என்று பாடியருள, அக்குயக் கொண்டான் அப்பொழுதே இறந்து வீழ்ந்தான் என்றும், சான்றோர் சிலர் அவன் அறியாமைக்கும் சாவிற்கும் வருந்தி நக்கீரனாரை அவனை மீண்டும் உயிர்ப்பிக்கக் கேட்டருள அவரும் அதற்கு இணங்கி,

ஆரியம் நன்று தமிழ்த்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச்-சீரிய அந்தண் பொதியின் அகத்தியனார் ஆணையாற் செந்தமிழே தீர்க்க சுவாகா என்று பாடி அவனை உயிர்ப்பித்தார் என்ப.

இவரை வாக்கிற்கருணகிரியார், கீதமொழி கூட்டி வேதமொழி சூட்டு கீரர். என்று பாராட்டியுள்ளார். அளப்பரிய இவர் கல்வி வன்மை பறறி இனைவறு குறுமுனி யிலக்கணம் பெறப், புனை தரும் இலக்கியப் புலவர் சிங்கம்’ என்று பதினெட்டாம் நூற்றாண்டின் இணையிலா இலக்கியப் புலவரும் கற்பனைக் களஞ்சியமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/24&oldid=585904" இலிருந்து மீள்விக்கப்பட்டது