பக்கம்:முருகன் காட்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் வரலாறு 23

ஆகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பாராட்டி யுள்ளார். கந்தபுராணம் பாடிய கவியரசராகிய கச்சியப்ப சிவாசாரியரும், பொய்யற்ற கீரன் முதலாப் புலவோர் புகழ்ந்த , ஐயன்” என முருகன் பெருமையினைப் பாராட்டு முகத்தானே முருகனைப் பரவிய அடி யவராம் நக்கீரனாரின் பெருமையினை நயம்படக் கிளத்தினர். கடைச்சங்கப் புலவர் நாற்பத்தொன் பதின் மரில் தலைமைப் புலவராய் இவர் வீற்றிருந்தமையே இவருடைய சீரினையும் சிறப் பினையும் புகழினையும் புலமையினையும் நன்கு புலப் படுத்தா நிற்கும். கொங்குதேர் வாழ்க்கை

நக்கீரனார் வரலாற்றோடு தொடர்புடைய பாட் டாகக் கொங்குதேர் வாழ்க்கை என்ற பாட்டு காணப் பெறுகின்றது. தருமி என்ற ஏழை அந்தனன் ஒருவன் மதுரையில் வாழ்ந்து வந்தான். பெற்ற தாயையும் பேணிக் காக்கும் தந்தையையும் இழந்த தருமி வறுமையின் கொடுமையால் வாடி மெலிந்தான். அவன் நல்ல கட்டிளம் காளைப் பருவத்தினன்; திருமணம் செய்து நல்லறமாம் இல்லறத்தில் தலைப்பட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தில் வேர்விட்டுத் தழைத்திருந்தது. ஆயினும் கோயிலில் அருச்சனை செய்யும் தொழிலை மேற்கொண் டிருந்த காரணத்தால், வறுமையுற்ற அவன் வாழ்வில் அவ் வெண்னம் செயல்படுவதற்கான அறிகுறிகள் தென்பட வில்லை. நாள்தோறும் தான் பூசித்து வணங்கும் சிவ பெருமானிடம் பின்வருமாறு முறையிட்டு வந்தான்:

தந்தை தாயிலேன் தனியன் ஆகிய மைந்த னேன்.புது வதுவை வேட்கையேன் வடிவில் இல்லற வாழ்க்கை இன்றிகின் அடிய ருச்சனைக் கருகன் ஆவனோ

-பரஞ்சோதி திருவிளையாடல் : 52; 85, 86 தருமி இவ்வாறு ளறுமையில் வாடி வருந்தி வரும் நாளில் பாண்டிய மன்னன் செண்பக மாறன் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/25&oldid=585905" இலிருந்து மீள்விக்கப்பட்டது