பக்கம்:முருகன் காட்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 முருகன் காட்சி

வாழ்க்கைத் துணைவியோடு இளவேனிலின் வெம்மைத் துயர் தணியும் பொருட்டுத் தன் சோலையின் பாங்கர் அமைந்திருந்த செய்குன்றில் அமர்ந்து, அசைந்து தவழ்ந்து வரும் தென்றலின் இனிமையில் தோய்ந்து கிடந்தான் தென்றலொடு நறுமணமும் கலந்து வந்தது.

வெவ்விய வேலான் வீசும் வாசமோங் தீது வேறு திவ்விய வாச மாக விருந்தது தென்றல் காவில் வெளவிய வாச மன்று காலுக்கும் வாச மில்லை எவ்வியல் வாச மேயோ விதுவென வெண்ணங்

கொள்வான். -பரஞ்சோதி திருவிளையாடல் : 52: 79

தென்றற் காற்றில் மிதந்து வந்த நறுமணம் பாண்டிய மன்னனின் அறிவுக்கு வேலை கொடுத்து விட்டது. ‘காற்றிற்கு மணம் இல்லையே; நந்தவனப் பூக்களின் மனமும் அன்றே இது. இப்புதிய நறுமணம் எங்கிருந்து வருகின்றது’ என்ற எண்ணத்தில்- ஆராய்ச்சியில் மனம் உளைந்தான். தன் பக்கலில் அமர்ந்திருந்த பாண்டிமா தேவியைப் பார்த்தான். அவள் கூந்தலில் அந்த நறுமணம் கமழ்ந்ததாக எண்ணினான். வண்டும் அறியாத புதிய மனமாக அ ஃது அவனுக்குத் தோன்றியது. எனவே, ‘கூந்தல் இயற்கை மணமுடைத்தோ அன்றிச் செயற்கை மனமுடைத்தோ?’ என்று ஐயுற்றான். என் ஐயப் பாட்டை அறிந்து அதற்கு விளக்கந் தரும் முறையில் உண்மையை உணர்ந்து யார் பாட்டு இயற்றுகின்றார் களோ அவர்கள் ஆயிரம் பொன்னைப் பரிசாகப் பெறு வார்கள்’ என்று அறிவித்துப் பொற்கிழி ஒன்றினை மதுரைத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் கட்டி வைத்தான்.

ஐயுறு கருத்தை யாவ ராயினும் மறிந்து பாடல்

செய்யுரு ரவர்க்கே யின்ன வாயிரஞ் செம்போ

கையுறை வேலா னிந்த பொற்கிழி . (னென்றக் -பரஞ்சோதி திருவிளையாடல் : 52 : 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/26&oldid=585906" இலிருந்து மீள்விக்கப்பட்டது