பக்கம்:முருகன் காட்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 முருகன் காட்சி

காணப்பெறும் குறிப்பு, இது தருமியென்னும் பிரம சாரிக்குப் பொற்கிழி வாங்கிக் கொடுக்க இறையனார் சிந்தா சமுத்தி பாடியது என்று காணப்படுகிறது. இந்த ஐந்தடிப் பாட்டினைப் பார்க்கும் பொழுது ஒன்றும் கதைக்குறிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இப்பாடல் புறநானூற்றில் இடம் பெறாமல் குறுந்தொகையில் இ - ம் பெற்றுள்ளது. பாட்டு முந்தியது; கதைக்குறிப்புப் பிந்தியது. ஆயினும் எப் படியோ இக் கதைக்குறிப்பு எக்காலத்திலோ, யாராலோ ஏற்றியுரைக்கப்பட்டுவிட்டது போல் தோன்றுகின்றது. ஏனெனில் பின்வந்த நூல்களில் தருமியின் பொருட்டு இறைவனுக்கும் நக்கீரர்க்கும் இ ைட யி ல் ஏற்பட்ட சொற் போர் சுட்டிக்காட்டப் பெறுகின்றது. முதற்கண் சங்கம் என்ற சொல் நேரிடையாக வரப்பெறும் ஆளுடைய அரசராம் திருநாவுக்கரசரின் திருப்புத்தார்த் தேவாரத்திலே இக்குறிப்பு இடம் பெற்றுள்ளது:

மின்காட்டுங் கொடிமருங்கு லுமையாட் கென்றும் விருப்பவன் காண் பொருப்புவலிச் சிலைக்கை

யோன் காண் நன்பாட்டுப் புலவனாய்ச்சங்க மேறி

நற்கனக கிழிதருமிக் கருளி னோன்காண் பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற

புனக்காந்தள் (கைகாட்டக் கண்டு வண்டு தென்காட்டுஞ் செழும்புறவிற்றிருப்புத் துரில்

திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. கி. பி. ஏழாம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர் என்று திட்டவட்டமாக நம்பப்படுகின்ற திருநாவுக்கரசர் பெரு மான் தருமியின் பொருட்டு இறைவன புலவனாய்த் தோன்றிப் பொற்கிழி பெற்றுத் தந்ததாகக் கூறியுள் ளார். மணிவாசகப் பெருந்தகையோவெனில் இறைவன் நற்றமிழ் நூல்கள் ஆயப்பெறும் சங்க மண்டபம் சென்று விட்டனரோ என்று பொதுப்படக் குறிப்பிட்டுப் பாடி யுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/28&oldid=585908" இலிருந்து மீள்விக்கப்பட்டது